வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே ..

தாத்தா அளவுக்கே அந்த ஹார்மோனியத்துக்கு வயதிருக்கும் போல , ஆனால் என்ன அற்புதமான வாசிப்பு . தன்னுள் எஞ்சி இருக்கும் அத்தனையையும் ஒன்றுதிரட்டி இந்த வாசிப்புக்கு அளிப்பது போல தோன்றியது .பாடலின் முதலில் ஆரம்பிக்கும் புல்லாங்குழல் இசையை ஹார்மோனியத்தில் கொண்டு வரும் போதே , அடடே போட வைத்துவிடுகிறார் . இந்தப் பாடலில் வெளிப்படும் TMS குரலின் கம்பீரத்தையும் புல்லாங்குழலின் கனிவையும் ஒருசேர தன் வாசிப்பில் தவழவிடுகிறார்.

1:00 லிருந்து 1:30 வரை முதல் இண்டர்லூட் கேட்டுப்பாருங்கள் , சிரமமே இல்லாமல் லாவகமா வாசித்திருப்பார் ,தபேலாக்காரர் கூட இடையில் நிறுத்தி சிறிது தடுமாறியிருப்பார்.வயது எழுபதாவது இருக்கும் என்று நினைக்கிறேன் நெஞ்சில் நரை முடி தவழ , இடுப்பில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு, ஒரு சிறிய அறையில் இவர் அமர்ந்துகொண்டு வாசிக்கும் பொழுது , தன் இளமை காலங்களில் மேடைகளில் இவரின் வாசிப்பு இன்னும் எவ்வளவு துள்ளலாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முடிகிறது .

இந்த காணொளியில் அவரை பற்றி பெரிய குறிப்புகள் ஏதுமில்லை சங்கரதாஸ் அய்யா , போடிநாயக்கனூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அவ்வளவு தான். இன்னொரு இடத்தில் கலைமாமணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . இவரை குறித்து மேலதிக விபரம் தெரிந்த நண்பர்கள் பகிர்ந்துகொள்ளவும் .இந்த தருணத்தில் MSV இதை தன் ஹார்மோனியத்தில் இசை அமைக்கும் காட்சியும் மனதில் வந்து போகிறது.🙂

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: