சுகதேவ் காட்டும் இந்தியா

Scenes from 'An Indian Day' நண்பர் Aravindan Kannaiyan பக்கத்தில் , சமீபத்தில் வெளியான, இளையராஜா இசையமைத்த, தேசிய ஒருமைப்பாடு தீம் பாடல்களை கேட்டு நொந்து போய் ஒரு பதிவிட்டிருந்தார். ஏன் இப்படி எந்த ஆர்டிஸ்டிக் மெரிட்டும் இல்லாமல் ( குறிப்பாக பாடல் வரிகள் ) மந்தமான பிரச்சார படம் போல இருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்த போது பிலிம் டிவிசன் சார்பாக ஆவணபட இயக்குநர் எஸ்.சுகதேவ் உருவாக்கிய "An Indian Day" படம் ஞாபகத்துக்கு வந்தது.... Continue Reading →

வீடியோவும் விஷச்சுழற்சியும்

Minneapolis Riots சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் மினியாபொலீஸ் நகரத்தில் ஒரு கருப்பினத்தவர் போலீஸ் கைது நடவடிக்கையின் போது மரணித்த (கொல்லபட்ட ! ) வீடியோ பார்த்ததும் , முதலில் தோன்றியது ராட்னி கிங் சம்பவம்தான் . லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் கைது முயற்சியை எதிர்த்ததற்காக ராட்னி கிங் என்னும் கருப்பினத்தவர் நாலு போலீசாரால் மிகக் கடுமையாக தாக்கபட்டார்.இந்த நிகழ்ச்சி உலகளாவிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இது நடந்தது 1991 ல். அப்போதெல்லாம் இன்று போல எல்லோர்... Continue Reading →

தேவதச்சன்

Sketch by Tessa Jannetty தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய் நிற்கிறாள் சிறுமி கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள் சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன அவள் கண்ணுக்கு அடங்காமல் கனரக வாகனங்கள் அவளைக் கடந்து சென்றன வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில் இன்னொரு பகலில் போய்க் கொண்டிருக்கும் குண்டுப்பெண் சிறுமியின் ஷூ லேஸ் அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள் சொல்லவிரும்பிக் கை அசைத்தாள் சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது கொஞ்சம் புரியவில்லை.  -தேவதச்சன் 

திருவோடு

திருவோடு ஏந்தி தெருவழியே போனால் சோறுதான் விழும்; வேட்டி விழலாம்; ஒதுங்கிக் கொள்ள திண்ணையில் இடமும் தருவார்கள்; நீ கேட்பது போல் ஒருபோதும் மலர் விழுவதில்லை.‍ -பிரதீபன்

ஊழ்கத்தில் அமரும் பறவை

அந்த குருவிகள் சிறகு முளைத்து பறந்துபோய்விட்ட ஒரு கணத்தில் ஏதோ ஒரு வகையில் ஜெ எழுதிவரும் சிறுகதைகளுக்கும் ஒருவித கவித்துவ பூரணம் வந்து விட்டதாய் உணர்ந்தே. அதே போல ஜெ இன்று 69 சிறுகதைகளுக்குப் பின் இந்த தீவிர படைப்பு பாய்ச்சலின் நிறைவை அறிவித்திருக்கிறார். கதைகள் முடிந்துவிடவில்லை ஆனால் அவைகளை எழுதுவதை முடித்துக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார் .  வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்த கதைகள் வெவ்வேறு களங்களாக , வெவ்வேறு வடிவங்களாக , வெவ்வேறு உலகங்களாக தோன்றலாம் அனால் எழுத்தாளருக்கு... Continue Reading →

சென்ட்ரல் விஸ்டா vs தடுப்பூசிகள்

இந்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக ஒதுக்க வேண்டியிருக்கும் மொத்த தொகை கிட்டத்தட்ட 20,000 கோடிகள் . இந்த அளவு பிரமாண்டமான கட்டுமானத் திட்டம் என்றைக்குமே குறித்த செலவில் நடந்ததாய் சரித்திரமே இல்லை எனவே குறைந்தது மேலும் ஒரு 5000 கோடிகளாவது கூடுதலாக செலவாகும் .கடைசி நேர திட்ட மாற்றங்கள் ,எதிர்பாரா இடையூறுகள் , பொருட்கள் விலையேற்றம் , தாமதங்கள் , ஊழல் etc . ) இந்த பணத்துக்கு கிட்டத்தட்ட 40 % இந்தியர்களுக்கு இலவசமாக... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑