அத்னான் சாமி பதினைந்து வருடங்களுக்கு முன் நண்பர்கள் இணைந்து ஒரு நீண்ட ரோட் டிரிப் போயிருந்தோம். கிறிஸ்துமஸ் புத்தாண்டு இடைவெளியில். மொத்தம் 18 நாட்கள், 7000 சொச்சம் கி.மீ கள், ஆஸியின் நான்கில் ஒரு பங்கை கவர் செய்தோம் என்று சொல்லலாம். ஸ்மார்ட் போனோ ,யூடியூபோ இருந்திராத காலம், பாட்டு கேட்க வேண்டுமானல் CD தான் .இந்த பயணத்தின் போது ஓடவிட்டு தேய்த்த CD களில் ஒன்றுதான் அத்னான் சாமியின் ‘ Bheegi Bheegi’ ஆல்பம் .ஆஸி... Continue Reading →
Sanson ki mala pe
நுஸ்ரத் ஃபதே அலி கான் (Image Credit :BBC) இனி வாழ்நாள் முழுதும் ஒரே ஒரு பாடகரைத்தான் கேட்க முடியும் , யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டால் தயங்காமல் நுஸ்ரத் ஃபதே அலி கான் அவர்களை தான் சொல்லுவேன். சாசோன் கீ மாலா பே - கண்ணனை நாயகனாக வைத்து மீராபாய் எழுதிய பஜன் . இதை நுஸ்ரத் அலி கான் அவர்கள் இந்தியா வந்த போது கவ்வாலி வடிவில் பாடியது பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்... Continue Reading →
காட்சிப் பிழை
வில்லியம் பிளேக் எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி 1950 களில் சைக்டெலிக்ஸ் எனப்படும் உளமயக்கு மருந்துக்களுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு அதன் மூலம் மனம் மேலான விழிப்புணர்வு நிலையை அடைய முடியுமா என்று தன்னை தானே சோதித்துக்கொண்டார் .அந்த அனுபவங்களை பின்னர் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார் அதன் தலைப்பாக அவர் தேர்ந்தெடுத்த வரி தான் "The Doors of Perception" . வில்லியம் பிளேக்கின் கவிதை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்ட வரி. பின்னர் 1965 ல் , ஆல்டஸ் ஹக்ஸ்லியின்... Continue Reading →
இந்தி கவிதைகள்
அசோக் வாஜ்பாயி எழுத்தாளர் எம்.கோபால கிருஷ்ணன் பல இந்தி கவிதைகளை மொழிபெயர்த்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.கீத் சதுர்வேதி , மங்களேஷ் டபரால் , அசோக் வாஜ்பாயி , கிரிராஜ் கிராது , கேதார்நாத் சிங் என்று பல முக்கிய கவிஞர்கள் கவிதைகளும் இதில் அடக்கம். இந்த கவிதைகளை தொடர்ந்து படிக்கையில் இந்தி கவிதைகளின் அழகியல் குறித்தும் கவிதை போக்கு குறித்தும் நல்ல ஒரு அறிமுகம் கிடைக்கிறது.எனக்கு பிடித்த இரண்டு கவிதைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன் . மேலும் கவிதைகளை... Continue Reading →
சுஜாதாவும் சூஃபியும்
ஒரு வரியில் சொல்வதென்றால் படத்தில் என்ன பலமோ அதுவே பலவீனமாகவும் போய்விட்டது. படத்தின் ஈர்ப்பு அதன் அடர்த்தியான கரு ,அது உருவாக்கிய ஆர்வம் எதிர்பார்ப்பு ஆனால் அதை சரியாக ஹேண்டில் செய்ய முடியாத போது எதிர்பார்ப்பே பெரும் எடையாகி படத்தை கீழிறக்கிவிடுகிறது. கலை , காதல் , ஆன்மீகம் என்று மூன்றுமே தன்னளவில் ஆழமும் முழுமையும் கொண்ட சப்ஜெக்ட்ஸ் , இவைகளுக்கு இடையே உரையாடலையும் இணைவையும் உருவாக்கி ஒரு ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது எவ்வளவு... Continue Reading →
கற்சிலை
ராச்சியம்மா ஒரு காட்சியை ஓவியமாக உள்ளது உள்ளபடி வரைவதில் துல்லியம் என்பது முற்றாக கை கூடாது . ஏதோ ஒரு விதத்தில் சில அம்சங்கள் மிகையாகவோ போதாமைகளுடனோ அமைந்துவிடும் . தூரிகையில் தொட்டு எடுக்கும் வண்ணம் என்பது கண் முன் தோன்றும் வண்ணங்களின் நுண்மையை பிரதி எடுக்க முயலும் பாவனை மட்டுமே. படைப்பு என்பதே ஒரு விதத்தில் exaggeration தானே. ஆனாலும் 'உள்ளது உள்ளபடியே' எழுதவும் முடியாது .உள்ளது என்பது பெரும்பாலும் சாதாரணமானது , அன்றாடத்தன்மை கொண்டது... Continue Reading →