இந்தி கவிதைகள்

அசோக் வாஜ்பாயி எழுத்தாளர் எம்.கோபால கிருஷ்ணன் பல இந்தி கவிதைகளை மொழிபெயர்த்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.கீத் சதுர்வேதி , மங்களேஷ் டபரால் , அசோக் வாஜ்பாயி , கிரிராஜ் கிராது , கேதார்நாத் சிங் என்று பல முக்கிய கவிஞர்கள் கவிதைகளும் இதில் அடக்கம். இந்த கவிதைகளை தொடர்ந்து படிக்கையில் இந்தி கவிதைகளின் அழகியல் குறித்தும் கவிதை போக்கு குறித்தும் நல்ல ஒரு அறிமுகம் கிடைக்கிறது.எனக்கு பிடித்த இரண்டு கவிதைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன் . மேலும் கவிதைகளை... Continue Reading →

பொன் பூத்தல்

எடுத்து வைக்கவோ செருகிக் கொள்ளவோ இயலும். சூட வேண்டும் ஒரு முகூர்த்தம் பூவும் இருந்து கூந்தலும் இருந்துவிட்டால் சூடிக் கொண்டு விட இயலாது. -இசை The Glow To wear Or to bedeck One could do. But to adore One needs auspiciousness. To have the hair And the flower Is just not enough.

கடைசி இலை

அப்படி என்னதான் இருக்கிறது ஒரு மரத்தின் கடைசி இலைக்கு தன்னைப் பற்றி பீற்றிக்கொள்ள ? சரி - இப்படி கற்பனை செய்யுங்கள்.  ஒரு சிறிய எறும்பு தன்னந்தனியே ஒரு மரத்தடியே ஊர்ந்து செல்வதை. கற்பனை செய்யுங்கள் காற்றில் அலைக்கழிந்தாலும் அந்த இலை அந்த சிறிய எறும்பை வெயிலின் சுட்டெரிப்பில் இருந்து காத்து நிற்பதை. காற்று அதை மரத்திலிருந்து பிய்த்து எறிந்துவிட்டாலும் கூட பாதகமில்லை. அது மட்டும் அந்த எறும்பின் மீது ஒரு பெரிய பச்சை குடையைப் போலே விழுமானால் அப்படி மிக மெதுவாக விழுந்து பின் அதன் தாய் எறும்பு வந்து ஒரு விஷமக்கார புன்னகையுடன், தன் குழந்தையை தன்னிடமிருந்து ஓளித்து வைத்திருந்ததற்காக‌ அதனுடன் பொய்க்கோபம் கொள்ள காத்திருக்குமானால் ‍- வேறென்ன வேண்டும் ஒரு இலைக்கு?. -வீரான்குட்டி (மலையாளக் கவிஞர் வீரான் குட்டியின் கவிதை ஒன்றின் ஆங்கில வழி  மொழிபெயர்ப்பு ) https://www.poetryinternational.org/pi/poem/9993/auto/0/0/Veerankutty/The-Last-Leaf/en/tile?fbclid=IwAR3S7t41rgS7DQvUkdWmql4TvsAtAe2ep438EXRMqHdLer94BYgzRDY2TuQ #VeeranKutty #MalayalamPoems  #Translations #வீரான்குட்டி

Blog at WordPress.com.

Up ↑