
மெய்யியலை தத்துவார்த்த ரீதியாக இரண்டு விதமான அணுகுமுறைகளாக வகுப்பார்கள் perennial and traditonal . அதாவது ஏதாவது ஒற்றை மரபை மட்டுமே முழுதுமாக பின்பற்றி அதன் மூலம் மெய்யியல் சாரத்தை அடைவது , உதாரணமாக இந்து அல்லது இஸ்லாம் அல்லது கிருத்துவம் என்று ஏதோ ஒரு ஒற்றை மரபை மட்டுமே தேர்ந்தெடுத்து முன்செல்வது – இது மரபான மெய்யியல் .
அப்படி இல்லாமல் மெய்மையை சாத்தியமான அத்தனை முறைகள் மற்றும் வழிகளில் இருந்து திரட்டி எடுத்துக்கொள்வது . இதை perennialism என்பார்கள் அதாவது ‘என்றும் உள்ள’ மெய்மையை அதன் எல்லா வடிவிலும் அடையாளம் காண்பது . அப்படி அடையாளம் காண்பவற்றை இணைத்து ஒரு ஒட்டுமொத்த பார்வையை உருவாக்கிக்கொள்வது . இது மதம் என்று நம் அன்றாட புழக்கத்தில் இருக்கும் விஷயத்துக்கு பொருந்தாது தூய மீமெய்யியல் (Metaphysical ) நோக்கில் மட்டுமே இந்த இணைவு பொருள்படும் .
இந்த இரண்டு தரப்பிலுமே புகழ் பெற்ற மெய்யியலாளர்கள் உருவாகி வந்துள்ளார்கள் . இந்த இரண்டு தரப்புக்குமே அதனதன சாதக பாதகம் குறித்த மிக நீண்ட உரையாடல் நடந்து வந்திருந்திருக்கிறது . அப்படி பெரினியலிஸ்டுகளின் தரப்பில் இருந்து வந்த முக்கிய ஆளுமையாக ஃப்ரித்ஜாஃப் ஷூவானை (Frithjof Schuon ) சொல்லலாம் .மிக வசீகரமான ஆளுமையும் கூட .
அவரிடம் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியின் மூன்று நிமிட சிறிய துணுக்கொன்று கேட்டேன் . உண்மையை கண்டறிவது எப்படி ? மதம் ஏன் மனிதனுக்கு தேவையாக இருக்கிறது ?மெய்யியல் நோக்கில் மதங்களுக்கு இடையேயான syncretism சாத்தியமா போன்ற சிக்கலான கேள்விகளுக்கு கூட எளிமையான அழகான பதில்களை அளித்திருப்பார்.
இந்திய வேதாந்தம் உட்பட பல மரபுகளில் மெய்யியல் சாரங்கள் குறித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார் . அமெரிக்க பூர்வ குடிகளுடம் வாழ்ந்திருக்கிறார் . மெய்யியல் குறித்த நம் பார்வையை மேலும் விசாலமாக்கும் அணுகுமுறை இவருடையது .
Leave a Reply