கர்ணன் – காலைச் சுடரொளி

நேற்று கர்ணன் படம் பார்த்தேன். மேலோட்டமாக இந்த படம் குறித்த பல விமர்சனங்களை முன்னரே வாசித்திருந்தேன் . ஆனால் படத்தை பார்த்தபிறகு படமும் விமர்சனங்களுக்கும் முற்றிலும் வெவ்வேறு தளங்களில் செயல்படுவதாக தோன்றியது . இந்தப் படம் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்ட ,கதை நிகழும் வருடம் குறித்த விமர்சனத்துக்கு படத்துக்கு வெளியே ஒரு அரசியல் முக்கியத்துவம் இருந்திருக்கலாம். ஆனால் படத்தின் மீதோ , படம் சொல்ல வந்த விஷயத்தின் மீதோ அது பெரிய தாக்கத்தை செலுத்தியதாகத் தெரியவில்லை. மாரி... Continue Reading →

சீன அத்துமீறல்கள் – 3

PC:Hulton Archives சீன அத்துமீறல் குறித்த முந்தைய பதிவுகளுக்கு பின் , சில நண்பர்கள் நான் மிகவும் pessimistic ஆன நோக்கில் இதை எழுதியிருப்பதாகவும் இந்தியா அப்படி கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்காது என்பதாகவும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டிருந்தார்கள் . சரி அவர்களின் நம்பிக்கையை குலைப்பானேன் என்று , பொதுவாக ஆம் அது ஒரு சாத்தியக்கூறு தான் என்று சொல்லிவைத்தேன். நமக்கு விருப்பமான ஒரு தீர்வு என்பதை எல்லா விஷயத்திலும் நாம் கோரலாம் தான் ஆனால் நாம்... Continue Reading →

சீன அத்துமீறல்கள் – 2

Photo Credit :PTI காதும் காதும் வைத்தது போல , diplomatic ஆக அந்த ஐந்தடியை வாங்கிக்கொண்டு (அதாவது கொடுத்துவிட்டு) , ரெண்டு பேருக்குமே மீசையில மண் ஒட்டவில்லை என்று ஒரு கூட்டறிக்கை விட்டு , கைகுலுக்கி , இதை இரு தரப்புக்கும் வெற்றியாக அறிவித்துக்கொள்வதுதான் சமயோசிதமானது . 2017 ல் டோக்லாமில் கிட்டத்தட்ட இதுதான் நடந்தது. இப்படி விளையாட்டாக இதை ஒரு கதையாக சொல்வது கிண்டல் அடிப்பது போல தோன்றலாம் ஆனால் இதுதான் நிதர்சனம் .... Continue Reading →

சீன அத்துமீறல்கள் – 1

Photo Credit - Yan Yan/Xinhua "இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாது பேச்சு பேச்சாதான் இருக்கனும் . "ஆமாம் கைப்புள்ள டயலாக் தான்,சிரிப்பாக இருந்தாலும் இதுதான் சர்வதேச diplomacy யின் அடிப்படை.பல அடுக்குகளில் நடக்கும் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வுகள் ,சந்திப்புகள் ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றிக்கும் விரிவான வரைமுறைகள் , முகமன்கள் மொழி ஆள்கைகள் , சமிக்கைகளும் etc. ஆனால் இவைகளின் மூலம் செயல்படுத்தப்படும் விஷயம் ஒன்றே. தத்தமது வலிமையை , அவரவருக்கு உபயோகமான ஒரு விஷயத்திற்கு... Continue Reading →

வாழ்க்கையென்னும் விசித்திரம்

நீதிமன்ற கிளார்க்காக பணி புரியும் இருபத்து மூன்று வயது ஆஷ்லி அவர் பணி புரியும் கோர்ட்டில் மேஜிஸ்டிரேட்டாக இருக்கும் ரோட்னி ஹிக்கின்ஸ் என்பவர் மீது காதல் வயப்படுகிறார் .ரோட்னிக்கு வயது 68 , ஆஷ்லியை விட இரண்டு மடங்கு வயதில் மூத்தவர் . சரி வயது ஒரு பக்கம் இருக்கட்டும் , பரஸ்பரம் காதல் ,எனவே இதை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார்கள் .நிச்சயதார்த்தம் மோதிரம் எல்லாம் அளித்து , அந்த செய்தி பத்திரிக்கைகளைல் பரவலாக பேசப்பட்டது. இதெல்லாம் நடந்தது... Continue Reading →

கடைசி இலை

அப்படி என்னதான் இருக்கிறது ஒரு மரத்தின் கடைசி இலைக்கு தன்னைப் பற்றி பீற்றிக்கொள்ள ? சரி - இப்படி கற்பனை செய்யுங்கள்.  ஒரு சிறிய எறும்பு தன்னந்தனியே ஒரு மரத்தடியே ஊர்ந்து செல்வதை. கற்பனை செய்யுங்கள் காற்றில் அலைக்கழிந்தாலும் அந்த இலை அந்த சிறிய எறும்பை வெயிலின் சுட்டெரிப்பில் இருந்து காத்து நிற்பதை. காற்று அதை மரத்திலிருந்து பிய்த்து எறிந்துவிட்டாலும் கூட பாதகமில்லை. அது மட்டும் அந்த எறும்பின் மீது ஒரு பெரிய பச்சை குடையைப் போலே விழுமானால் அப்படி மிக மெதுவாக விழுந்து பின் அதன் தாய் எறும்பு வந்து ஒரு விஷமக்கார புன்னகையுடன், தன் குழந்தையை தன்னிடமிருந்து ஓளித்து வைத்திருந்ததற்காக‌ அதனுடன் பொய்க்கோபம் கொள்ள காத்திருக்குமானால் ‍- வேறென்ன வேண்டும் ஒரு இலைக்கு?. -வீரான்குட்டி (மலையாளக் கவிஞர் வீரான் குட்டியின் கவிதை ஒன்றின் ஆங்கில வழி  மொழிபெயர்ப்பு ) https://www.poetryinternational.org/pi/poem/9993/auto/0/0/Veerankutty/The-Last-Leaf/en/tile?fbclid=IwAR3S7t41rgS7DQvUkdWmql4TvsAtAe2ep438EXRMqHdLer94BYgzRDY2TuQ #VeeranKutty #MalayalamPoems  #Translations #வீரான்குட்டி

Blog at WordPress.com.

Up ↑