ஏற்கனவே புகழ் பெற்ற பாடல்களை கவர் செய்கிறேன் ரிப்ரைஸ் செய்கிறேன் என்று வரும் பெரும்பாலான பாடல்களின் சொதப்பலை பார்த்து நொந்து போயிருக்கும் தருணங்களில் இது போன்ற பாடல்களை கேட்கக்கிடைப்பது அப்படியே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறது. ஏற்கனவே வெட்டி செதுக்கப்பட்ட வைரத்தை மேலும் மிளிரச்செய்வேன் என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல.அந்த படைப்பின் ஜீவனுக்குள் முதலில் போக வேண்டும் பின் அதில் ஒரு கலைஞனாக உணரும் இன்ஸ்பிரேஷனை கொண்டு பாடலை அதன் மைய அழகியல் குலையாமல் ,... Continue Reading →
சுயாதீன தரப்பு
இந்த ஒரு வருடத்தில் தமிழக நிகழ்வுகளையும் அது குறித்த பேஸ்புக் விவாதங்களையும் தொடர்ந்து கவனித்து வந்ததில் ஒரு புரிதல் கிட்டியிருக்கிறது . தமிழ் நாட்டில் கலை , இலக்கியம் , கல்வி , மொழி , இசை , சினிமா , சிந்தனை , அரசியல் , ஆடு, மாடு, கோழி என்று எதை எடுத்துக்கொண்டாலும் அந்த தளத்தில் முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் இறுதியாக இரண்டு தரப்பாக பிரிந்து நிற்பதையே பார்க்கிறேன் . ஒருபுறம் திமுக ஆதரவு நிலைப்பாடு... Continue Reading →