முள்ளை முள்ளால்

குத்தி நுழைந்து முறிந்து குருதி மாந்தியபடியே கிடந்து அழுந்தி புண்ணும் சீழும் வாதையுமாய்த் துயர் தரும் முள்ளும், அம் முள்ளைக் குத்திக் கிளர்த்தி வெளிக்கொணர்ந்து துயராற்றத் துடிக்கும் முள்ளும் ஒன்றாமோ? -தேவதேவன்

குதூகலத்தின் ஓவியன்

Scruffy the Tugboat by Tibor Gergely குழந்தைகளுக்காக வரையப்படும் ஓவியங்களில் , சித்திரங்களில், குழந்தைகளால் மட்டுமே கற்பனை செய்ய முடிகிற ஒரு உலகம் இருக்க வேண்டும் , தொட்டால் ஒட்டிக்கொள்ளும் குதூகலம் இருக்க வேண்டும் ,குழந்தைகளின் உலகத்தில் எது முக்கியமோ அதை பெரிதாக்கவேண்டும், மிகைப்படுத்த வேண்டும் அவர்களின் பார்வையில் எது முக்கியமில்லையோ, தேவையில்லையோ அதை தவிர்க்க வேண்டும்.அதன் கோடுகளிலும் வண்ணங்களிலும் ஒரு களங்கமற்ற தன்மை இருக்க வேண்டும் . காலப்போக்கில் வாழ்வில் நிதர்சனத்தை எப்படியும் அவர்கள்... Continue Reading →

எம்.கோவிந்தன்

எம்.கோவிந்தன் "கோவிந்தன் சிந்தனை அடிப்படையில் ஒரு ராடிகல் ஹூமனிஸ்ட். எம்.என்.ராயிடமிருந்து பெற்ற இந்தக் கருத்தாக்கத்தை தனது சுய சிந்தனை மூலம் விரிவாக்கம் செய்து கொண்டார். அதை இப்படிச் சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன்.' மனிதனின் படைப்பாற்றலுடன் இணைத்துத்தான் சுதந்திரத்தைப் புரிந்து கொண்டார் கோவிந்தன். படைப்பு உருவாக்கத்தின் விதையும் அது முளை விட்டு வளர்வதற்கான சூழலும் அந்தக் கற்பனையில்தான் துலங்குகின்றன. இதில் தனிமனிதன் என்ற கருத்துக்கு அழுத்தம் அதிகம். ஆனால் அவனுடைய சமூக இயல்பை அந்த அழுத்தம் மறுப்பதில்லை. சமூகத்தை... Continue Reading →

சொல்நிரம்பிய கலம்

"சொல்லே உடலில் வாழும் அனல் என்பது வேதாந்த மரபு. சொல்லப்படாத சொற்களெல்லாம் அனலாக எரியும். காதலில் உறவில் அன்பில் பகைமையில் சொல்லப்படாத சொற்கள். எத்தருணத்திலும் சொன்ன சொற்களைவிட சொல்லப்படாதவையே மிகுதி. அவை மானுடனின் உள்ளே நிறைந்துள்ளன. மானுடன் சொல்நிரம்பிய கலம்." -ஜெ ( சிவம் சிறுகதை)

20 லட்சம் கோடிகள் – எப்படி செலவளிக்கலாம் ?

(2020 மே மாதம் இந்திய அரசு கொரோனா பரவலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொருளாதார உதவி திட்டம் குறித்து எழுதியது ) முந்தைய பதிவு ஒன்றில் கொரோனா பாதிப்புக்கு உதவியாக அரசு அறிவித்திருக்கும் நிதித்தொகுப்பு நல்ல விஷயமே என்றும் ஆனால் அது எவ்வாறு செலவு செய்யப்படப் போகிறதோ என்ற என் ஐயங்களையும் , அச்சங்களையும் பதிவு செய்திருந்தேன்.அதை ஆமோதிக்கும் விதமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்பு அமைந்திருக்கிறது இது குறித்து வெறுமனே ஆலோசனைகளை சொல்லாமல் யாராவது ஒரு... Continue Reading →

கருப்பு பொட்டிட்ட மஞ்சள் பூசணிகள்

பெரிதும் அறியப்பட்ட சமகால ஜப்பானிய கலைஞரான யயோய் குஸாமாவின் ( Yayoi Kusama ) கலை உருவாக்கத்தை பார்க்கும் வாய்ப்பு இன்று கிட்டியது.தற்போது ஆஸி தலைநகரான கான்பராவில் , ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்தில் இது நிறுவப்பட்டுள்ளது .Experiential Art வகையில் வரும் இந்த‘கலை நிறுவல்’ பார்வையாளர்கள் இடையே மிகவும் பிரபலம் போலிருக்கிறது, வரிசையில் நின்று காத்திருந்து பார்க்கிறார்கள். அதே காலரியில் தான் மொனேவும் , ஜாக்ஸன் பொலாக்கும் இருக்கிறார்கள் . மொனேவின் ‘நீர் ஆம்பல்களின்’ முன் அமர்ந்திருந்து... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑