அறுவடை நாள்

அறுவடை நாளில் சிரம் பிழைத்துக் கிடக்கும் நெற்கதிர் குறித்த பிரமிளின் அபாரமான கவிதை ஒன்றை எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் பகிர்ந்திருந்தார் . மலை துளைத்து செல்லும் ரயில் வெளிவருகையில் நம் கண்களில் பட்டு கூசும்பொன் வெய்யிலை போன்ற கவிதை ஒரு நூற்றெட்டு அரிவாள் நிழல்கள் பறக்கும் அறுவடை வயல்வெளியில் ஏதோ ஒரு ஆள் நிழல் மிதிக்க மடங்கி சிரம் பிழைத்துக் கிடந்து அறுவடை முடிய ஆட்கள் நகர மெல்ல வளைந்தெழுந்து தனித்து நாணிற்று ஒரு கதிர் உச்சியில் ஒரு நெல் சுற்றிலும் வரப்பு நிழல்களின் திசை நூல்கள் இன்று நிழல் நகரும் நாளை உதயம் உனக்கும் நாணத் திரை நகரும் உயிர் முதிரும் உன் கூந்தலின் உமி நீக்கி வெடித்தெழும் வெண் முகம் ஓர்... Continue Reading →

அம்பேத்கரின் வரலாற்று பார்வை

Egalitarians அமைப்பின் சார்பாக அம்பேத்கர் குறித்து ஜெ ஆற்றியிருக்கும் இந்த உரை முக்கியமானது . பெரும் ஆளுமைகளை நாம் பொதுவாக ஒருவாறு சுருக்கி திரட்டி வலுவான ஒற்றை அடையாளமாக ஆக்கிக்கொள்வது இயல்புதான் . காந்தி என்றால் அகிம்சை , போஸ் என்றால் வீரம் என்பது போல . ஒருவர் முக்கியமாக எதற்காக நின்றார் ,எதில் சிறந்து விளங்கினார் , எதற்காக பாடுபட்டார் எவ்விதம் வெளிப்பட்டார் என்பது ஒரு ஒற்றை அடையாளமாக இருக்கும்போது தான் அதன் மூலம் பெரும்... Continue Reading →

ஃப்ரித்ஜாஃப் ஷூவான்

Frithjof Schuon மெய்யியலை தத்துவார்த்த ரீதியாக இரண்டு விதமான அணுகுமுறைகளாக வகுப்பார்கள் perennial and traditonal . அதாவது ஏதாவது ஒற்றை மரபை மட்டுமே முழுதுமாக பின்பற்றி அதன் மூலம் மெய்யியல் சாரத்தை அடைவது , உதாரணமாக இந்து அல்லது இஸ்லாம் அல்லது கிருத்துவம் என்று ஏதோ ஒரு ஒற்றை மரபை மட்டுமே தேர்ந்தெடுத்து முன்செல்வது - இது மரபான மெய்யியல் . அப்படி இல்லாமல் மெய்மையை சாத்தியமான அத்தனை முறைகள் மற்றும் வழிகளில் இருந்து திரட்டி... Continue Reading →

பில் & மெலிண்டா கேட்ஸ்

(Image Credit:National Geography ) சமீபத்தில் கொரோனா வாக்சின் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தம் பட்டிருக்கிறார் என்று ஒரு சதிச்செய்தி ( conspiracy ) இணையத்தில் உலாவியபடி இருந்தது , அதை நண்பர்கள் வட்டத்திலே சிலர் நம்பவும் செய்தார்கள் . அப்போதே பில் கேட்ஸ் பெளண்டேஷன் குறித்து எழுத எண்ணியிருந்தேன் . எழுதியிருக்க வேண்டும் , இப்பொது ஒரு வருத்தமான சூழலில் அதை எழுதவேண்டியதாகிப் போனது. இன்று பில் கேட்ஸும்... Continue Reading →

தேர்தல் முடிவுகள்

பல மாநிலங்களை சார்ந்த பல கோடி மக்கள் வாக்களித்ததில் அடினாதமான என்ன எழுந்து வருகிறது என்று யோசித்துப்பார்த்தால் அது பிஜேபியை மறுக்கும் ஒரு நிலைப்பாடு என்று சொல்லலாம் . கேரளாவில் முன்னர் இருந்த ஒற்றை தொகுதியையும் இம்முறை இழந்தது . கடினமான போட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்ட வங்காளத்தில் கூட மம்தா 48 % வாக்குகளை பெற்று பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் . தமிழகத்தில் பாஜாகாவுடன் கூட்டு சேராமல் இருந்திருந்தால் அதிமுகவுக்கு இன்னுமே கூட வாக்குகள் அதிகம்... Continue Reading →

ஃபாஸ்பரி ஃப்ளாப்

American high jump champion Dick Fosbury clears the bar during practice, 10 October 1968 in Mexico. Fosbury later won the gold medal at the Olympic Games with a jump of 2.24 m, while inventing a new style dubbed the "Fosbury flop", used ever since by high jumpers all over the world. AFP PHOTO தற்போது ஆஸி... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑