"நான் வீட்டுக்குள் இருக்கும்போது சுவாதீனமாக நானாக இருக்கிறேன். பயணிக்கும்போது வேறு ஆளாக மாறிவிடுகிறேன். என் வீட்டைவிட்டுத் தள்ளிப் போகப்போக எனக்கே நான் அந்நியமாகி விடுகிறேன். அப்படியான தொலைவு உள்ளே கிடைக்கிறது. நானும், ஜெயமோகனும், வசந்த குமாரும் ஹரித்துவாரில் கும்பமேளா பார்ப்பதற்காகப் போயிருந்தோம். ராத்திரி இரண்டு மணிவரை குடுகுடுப்பைக்காரன்போல, தலையில் உருமால் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன். என் தெருவில் அதைச் செய்ய மாட்டேன். கங்கைக் கரையில் இருந்த நடைபாதையில் படுத்துத் தூங்கினோம். இப்படி நான் ஒரு அநாமதேயமாக ஆவது எனது... Continue Reading →
ஒரு ஞாயிற்றுக்கிழமை
Cahill Expressway , 1962 - Jeffrey Smart ஒரு ஞாயிற்றுக்கிழமையின் வெய்யில் தார்ச் சாலைகளில் நிழல் தழும்புகளைப் பதிக்கிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் வெறுமை எவருமற்ற கார் நிறுத்துமிடங்களை நிரப்புகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் தனிமை என்னை துணைக்கு அழைக்கிறது -கார்த்திக்வேலு
மக்தூமின் மலர்கள்
சுப்ரியா பதக் - ஃபரூக் ஷேய்க் Bazaar படத்தில் வரும் அற்புதமான கசல் . இதை எழுதிய மக்தூம் மொஹியுதீன் , பெரிய புரட்சிகர கவிஞராக இருந்திருக்கிறார். தொழிற் சங்கங்களில் இருந்துகொண்டு தொடர் கிளர்ச்சிகளை நடத்தியிருக்கிறார். ஹைதராபாத் சமஸ்தானத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து நிஜாமுக்கு எதிரான ஜமீந்தாரி ஒழிப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றிருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கம்யூனிஸ்ட கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றிருக்கிறார்.இந்த பாடலுக்கு அவரின் களப்பணிக்கும் சம்பந்தமே இல்லாதது... Continue Reading →
கூடுதே பாடுதே
SPB பாட்டிலேயே அத்தனை பாவங்களையும் கொண்டு வந்துவிடுவார் என்று சொல்லுவார்கள், அதாவது தனியாக இசையே தேவையில்லை என்பதாக . சினிமா பாடல்களுக்கு இயல்பாகவே அந்த தேவை இருக்கிறது , இங்கு கதையின் போக்கோடு தான் இசை வருகிறது என்பதால் சினிமாவின் உணர்ச்சிப்போக்கிற்கு அது ஒத்துழைப்பதாக அமைய வேண்டியிருக்கு . இசையின் உணர்ச்சிகள் கதையோடும் கதையின் உணர்ச்சிகள் இசையோடு பின்னி பிணைந்த complex அழகியல் இது. மரபிசைக்கு இந்த நேரடி தேவை இல்லை அதன் emotional content என்பது... Continue Reading →