What sort of

Gnanakoothan Someone walked towards me As if wanting to enquire about something Perhaps it’s about A shop ? A House ? A Hall ? Or a Temple even ? As I stood there wondering What he is going to ask Almost opening his mouth, to talk He simply passed by me – In silence. See... Continue Reading →

Grief is a Mouse

Emily Dickinson Grief is a Mouse —And chooses Wainscot in the BreastFor His Shy House —And baffles quest —Grief is a Thief — quick startled —Pricks His Ear — report to hearOf that Vast Dark —That swept His Being — back —Grief is a Juggler — boldest at the Play —Lest if He flinch —... Continue Reading →

தேவதச்சன்

Sketch by Tessa Jannetty தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய் நிற்கிறாள் சிறுமி கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள் சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன அவள் கண்ணுக்கு அடங்காமல் கனரக வாகனங்கள் அவளைக் கடந்து சென்றன வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில் இன்னொரு பகலில் போய்க் கொண்டிருக்கும் குண்டுப்பெண் சிறுமியின் ஷூ லேஸ் அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள் சொல்லவிரும்பிக் கை அசைத்தாள் சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது கொஞ்சம் புரியவில்லை.  -தேவதச்சன் 

திருவோடு

திருவோடு ஏந்தி தெருவழியே போனால் சோறுதான் விழும்; வேட்டி விழலாம்; ஒதுங்கிக் கொள்ள திண்ணையில் இடமும் தருவார்கள்; நீ கேட்பது போல் ஒருபோதும் மலர் விழுவதில்லை.‍ -பிரதீபன்

முள்ளை முள்ளால்

குத்தி நுழைந்து முறிந்து குருதி மாந்தியபடியே கிடந்து அழுந்தி புண்ணும் சீழும் வாதையுமாய்த் துயர் தரும் முள்ளும், அம் முள்ளைக் குத்திக் கிளர்த்தி வெளிக்கொணர்ந்து துயராற்றத் துடிக்கும் முள்ளும் ஒன்றாமோ? -தேவதேவன்

அறுவடை நாள்

அறுவடை நாளில் சிரம் பிழைத்துக் கிடக்கும் நெற்கதிர் குறித்த பிரமிளின் அபாரமான கவிதை ஒன்றை எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் பகிர்ந்திருந்தார் . மலை துளைத்து செல்லும் ரயில் வெளிவருகையில் நம் கண்களில் பட்டு கூசும்பொன் வெய்யிலை போன்ற கவிதை ஒரு நூற்றெட்டு அரிவாள் நிழல்கள் பறக்கும் அறுவடை வயல்வெளியில் ஏதோ ஒரு ஆள் நிழல் மிதிக்க மடங்கி சிரம் பிழைத்துக் கிடந்து அறுவடை முடிய ஆட்கள் நகர மெல்ல வளைந்தெழுந்து தனித்து நாணிற்று ஒரு கதிர் உச்சியில் ஒரு நெல் சுற்றிலும் வரப்பு நிழல்களின் திசை நூல்கள் இன்று நிழல் நகரும் நாளை உதயம் உனக்கும் நாணத் திரை நகரும் உயிர் முதிரும் உன் கூந்தலின் உமி நீக்கி வெடித்தெழும் வெண் முகம் ஓர்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑