"சொல்லே உடலில் வாழும் அனல் என்பது வேதாந்த மரபு. சொல்லப்படாத சொற்களெல்லாம் அனலாக எரியும். காதலில் உறவில் அன்பில் பகைமையில் சொல்லப்படாத சொற்கள். எத்தருணத்திலும் சொன்ன சொற்களைவிட சொல்லப்படாதவையே மிகுதி. அவை மானுடனின் உள்ளே நிறைந்துள்ளன. மானுடன் சொல்நிரம்பிய கலம்." -ஜெ ( சிவம் சிறுகதை)
20 லட்சம் கோடிகள் – எப்படி செலவளிக்கலாம் ?
(2020 மே மாதம் இந்திய அரசு கொரோனா பரவலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொருளாதார உதவி திட்டம் குறித்து எழுதியது ) முந்தைய பதிவு ஒன்றில் கொரோனா பாதிப்புக்கு உதவியாக அரசு அறிவித்திருக்கும் நிதித்தொகுப்பு நல்ல விஷயமே என்றும் ஆனால் அது எவ்வாறு செலவு செய்யப்படப் போகிறதோ என்ற என் ஐயங்களையும் , அச்சங்களையும் பதிவு செய்திருந்தேன்.அதை ஆமோதிக்கும் விதமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்பு அமைந்திருக்கிறது இது குறித்து வெறுமனே ஆலோசனைகளை சொல்லாமல் யாராவது ஒரு... Continue Reading →
கருப்பு பொட்டிட்ட மஞ்சள் பூசணிகள்
பெரிதும் அறியப்பட்ட சமகால ஜப்பானிய கலைஞரான யயோய் குஸாமாவின் ( Yayoi Kusama ) கலை உருவாக்கத்தை பார்க்கும் வாய்ப்பு இன்று கிட்டியது.தற்போது ஆஸி தலைநகரான கான்பராவில் , ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்தில் இது நிறுவப்பட்டுள்ளது .Experiential Art வகையில் வரும் இந்த‘கலை நிறுவல்’ பார்வையாளர்கள் இடையே மிகவும் பிரபலம் போலிருக்கிறது, வரிசையில் நின்று காத்திருந்து பார்க்கிறார்கள். அதே காலரியில் தான் மொனேவும் , ஜாக்ஸன் பொலாக்கும் இருக்கிறார்கள் . மொனேவின் ‘நீர் ஆம்பல்களின்’ முன் அமர்ந்திருந்து... Continue Reading →
பீஸ் லாக் கரோர் !
(போன வருடம் இதே நாள் எழுதிய பதிவு ) நேற்று மோடி அவர்கள் ஆற்றிய உரை கேட்டேன் , வழக்கமான சுற்றி வளைத்தல்களை தாண்டி நேரே "ஆத்மநிர்பர்" அறிவிப்புக்கு போய் விட்டேன். உரை ஆரம்பித்து 18 நிமிடம் கழித்து தான் மேட்டரே வருது , நல்ல வேளை யூடியிபில் ஒரு புண்ணியவான் நேரே இங்கே போ என்று டைம் ஸ்டாம்மையே கொடுத்துவிட்டார். முதலில் நல்ல விஷயம் Better late than never என்னும் அளவில் இந்த அறிவிப்பு... Continue Reading →
உணவும் மதமும்
Photo credit:Ay.Ashok Saravanan சமீபத்தில் ஒரு ஜைன உணவகத்தில் 'இங்கு முஸ்லிம்கள் வேலை செய்யவில்லை' என்று ஒரு போர்டை வைத்திருந்தது தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது.அது குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பல விவாதங்கள் நடந்தன . முஸ்லிம்களின் ஹலால் (Halal) உணவு என்ற வகைப்பாடு அடிப்படையில் உணவு சம்பந்தமானது அதை யார் தயார் செய்கிறார்கள் என்பது குறித்ததல்ல . யூதர்களின் கோஷர் (kosher) உணவும் அப்படியானதே , என்ன உணவு சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதான வரையறைதான்... Continue Reading →
‘அறமென்ப …’
ஜெயமோகன் அவர்களின் 'அறமென்ப..' சிறுகதை குறித்த வாசக குறிப்பு அறமென்ப சிறுகதை பிற கதைகளை காட்டிலும் மிகவும் நேரடியானது , வாசிக்க எளிமையானது அதனாலேயே மேலோட்டமான வாசிப்பில் சீண்டலாக தோன்றுவது . சிலருக்கு ஏழைகளை அவமானப்படுத்துவதாக தோன்றலாம் சிலருக்கு நான் அப்பவே நினைச்சேன் இப்படித்தான் ஏமாற்றுவார்கள் என்று தோன்றலாம் . ஆனால் இது ஒரு நேரடியான சமூக விமர்சன கதை அல்ல என்று நினைக்கிறேன். கதைக்களனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ரோட்டில் அடிபட்ட கிடக்கும் ஒருவரை காப்பாற்றுதல்" நமக்கு மிகவும்... Continue Reading →