திருவோடு

திருவோடு ஏந்தி தெருவழியே போனால் சோறுதான் விழும்; வேட்டி விழலாம்; ஒதுங்கிக் கொள்ள திண்ணையில் இடமும் தருவார்கள்; நீ கேட்பது போல் ஒருபோதும் மலர் விழுவதில்லை.‍ -பிரதீபன்

ஊழ்கத்தில் அமரும் பறவை

அந்த குருவிகள் சிறகு முளைத்து பறந்துபோய்விட்ட ஒரு கணத்தில் ஏதோ ஒரு வகையில் ஜெ எழுதிவரும் சிறுகதைகளுக்கும் ஒருவித கவித்துவ பூரணம் வந்து விட்டதாய் உணர்ந்தே. அதே போல ஜெ இன்று 69 சிறுகதைகளுக்குப் பின் இந்த தீவிர படைப்பு பாய்ச்சலின் நிறைவை அறிவித்திருக்கிறார். கதைகள் முடிந்துவிடவில்லை ஆனால் அவைகளை எழுதுவதை முடித்துக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார் .  வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்த கதைகள் வெவ்வேறு களங்களாக , வெவ்வேறு வடிவங்களாக , வெவ்வேறு உலகங்களாக தோன்றலாம் அனால் எழுத்தாளருக்கு... Continue Reading →

சென்ட்ரல் விஸ்டா vs தடுப்பூசிகள்

இந்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக ஒதுக்க வேண்டியிருக்கும் மொத்த தொகை கிட்டத்தட்ட 20,000 கோடிகள் . இந்த அளவு பிரமாண்டமான கட்டுமானத் திட்டம் என்றைக்குமே குறித்த செலவில் நடந்ததாய் சரித்திரமே இல்லை எனவே குறைந்தது மேலும் ஒரு 5000 கோடிகளாவது கூடுதலாக செலவாகும் .கடைசி நேர திட்ட மாற்றங்கள் ,எதிர்பாரா இடையூறுகள் , பொருட்கள் விலையேற்றம் , தாமதங்கள் , ஊழல் etc . ) இந்த பணத்துக்கு கிட்டத்தட்ட 40 % இந்தியர்களுக்கு இலவசமாக... Continue Reading →

முள்ளை முள்ளால்

குத்தி நுழைந்து முறிந்து குருதி மாந்தியபடியே கிடந்து அழுந்தி புண்ணும் சீழும் வாதையுமாய்த் துயர் தரும் முள்ளும், அம் முள்ளைக் குத்திக் கிளர்த்தி வெளிக்கொணர்ந்து துயராற்றத் துடிக்கும் முள்ளும் ஒன்றாமோ? -தேவதேவன்

குதூகலத்தின் ஓவியன்

Scruffy the Tugboat by Tibor Gergely குழந்தைகளுக்காக வரையப்படும் ஓவியங்களில் , சித்திரங்களில், குழந்தைகளால் மட்டுமே கற்பனை செய்ய முடிகிற ஒரு உலகம் இருக்க வேண்டும் , தொட்டால் ஒட்டிக்கொள்ளும் குதூகலம் இருக்க வேண்டும் ,குழந்தைகளின் உலகத்தில் எது முக்கியமோ அதை பெரிதாக்கவேண்டும், மிகைப்படுத்த வேண்டும் அவர்களின் பார்வையில் எது முக்கியமில்லையோ, தேவையில்லையோ அதை தவிர்க்க வேண்டும்.அதன் கோடுகளிலும் வண்ணங்களிலும் ஒரு களங்கமற்ற தன்மை இருக்க வேண்டும் . காலப்போக்கில் வாழ்வில் நிதர்சனத்தை எப்படியும் அவர்கள்... Continue Reading →

எம்.கோவிந்தன்

எம்.கோவிந்தன் "கோவிந்தன் சிந்தனை அடிப்படையில் ஒரு ராடிகல் ஹூமனிஸ்ட். எம்.என்.ராயிடமிருந்து பெற்ற இந்தக் கருத்தாக்கத்தை தனது சுய சிந்தனை மூலம் விரிவாக்கம் செய்து கொண்டார். அதை இப்படிச் சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன்.' மனிதனின் படைப்பாற்றலுடன் இணைத்துத்தான் சுதந்திரத்தைப் புரிந்து கொண்டார் கோவிந்தன். படைப்பு உருவாக்கத்தின் விதையும் அது முளை விட்டு வளர்வதற்கான சூழலும் அந்தக் கற்பனையில்தான் துலங்குகின்றன. இதில் தனிமனிதன் என்ற கருத்துக்கு அழுத்தம் அதிகம். ஆனால் அவனுடைய சமூக இயல்பை அந்த அழுத்தம் மறுப்பதில்லை. சமூகத்தை... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑