பகவதியில் இருந்து பகவதி வரை

(ஜெயமோகனின் 'செய்தி' சிறுகதை குறித்த வாசிப்பு அனுபவம் ) /அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளுடைய இமைகள் சரிந்திருந்தன. மூடிய இமைகள் இப்படி பளபளப்பாக இருக்குமா? உள்ளே கருவிழிகள் ஓடும் அசைவு வண்டுபோல தெரிந்தது. உதடுகள் ஈரமாகி சற்றே வளைந்திருக்க கழுத்திலும் தோள்களிலும் வியர்வையின் பளபளப்பு// ஒரு இளைஞனின் அகத்தில் அவனை அறியாமல் காமம் கிளர்வதை இயல்பாக சொல்லிப்போகும் கதை . இதை காமம் என்று சொல்வதே கூட மிகததட்டையான ஒரு வார்த்தைதான் .ஒரு சிலையின் எடைக்கு... Continue Reading →

ஊழ்கத்தில் அமரும் பறவை

அந்த குருவிகள் சிறகு முளைத்து பறந்துபோய்விட்ட ஒரு கணத்தில் ஏதோ ஒரு வகையில் ஜெ எழுதிவரும் சிறுகதைகளுக்கும் ஒருவித கவித்துவ பூரணம் வந்து விட்டதாய் உணர்ந்தே. அதே போல ஜெ இன்று 69 சிறுகதைகளுக்குப் பின் இந்த தீவிர படைப்பு பாய்ச்சலின் நிறைவை அறிவித்திருக்கிறார். கதைகள் முடிந்துவிடவில்லை ஆனால் அவைகளை எழுதுவதை முடித்துக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார் .  வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்த கதைகள் வெவ்வேறு களங்களாக , வெவ்வேறு வடிவங்களாக , வெவ்வேறு உலகங்களாக தோன்றலாம் அனால் எழுத்தாளருக்கு... Continue Reading →

சொல்நிரம்பிய கலம்

"சொல்லே உடலில் வாழும் அனல் என்பது வேதாந்த மரபு. சொல்லப்படாத சொற்களெல்லாம் அனலாக எரியும். காதலில் உறவில் அன்பில் பகைமையில் சொல்லப்படாத சொற்கள். எத்தருணத்திலும் சொன்ன சொற்களைவிட சொல்லப்படாதவையே மிகுதி. அவை மானுடனின் உள்ளே நிறைந்துள்ளன. மானுடன் சொல்நிரம்பிய கலம்." -ஜெ ( சிவம் சிறுகதை)

‘அறமென்ப …’

ஜெயமோகன் அவர்களின் 'அறமென்ப..' சிறுகதை குறித்த வாசக குறிப்பு அறமென்ப சிறுகதை பிற கதைகளை காட்டிலும் மிகவும் நேரடியானது , வாசிக்க எளிமையானது அதனாலேயே மேலோட்டமான வாசிப்பில் சீண்டலாக தோன்றுவது . சிலருக்கு ஏழைகளை அவமானப்படுத்துவதாக தோன்றலாம் சிலருக்கு நான் அப்பவே நினைச்சேன் இப்படித்தான் ஏமாற்றுவார்கள் என்று தோன்றலாம் . ஆனால் இது ஒரு நேரடியான சமூக விமர்சன கதை அல்ல என்று நினைக்கிறேன். கதைக்களனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ரோட்டில் அடிபட்ட கிடக்கும் ஒருவரை காப்பாற்றுதல்" நமக்கு மிகவும்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑