ஒரு ஞாயிற்றுக்கிழமை

Cahill Expressway , 1962 - Jeffrey Smart ஒரு ஞாயிற்றுக்கிழமையின் வெய்யில் தார்ச் சாலைகளில் நிழல் தழும்புகளைப் பதிக்கிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் வெறுமை எவருமற்ற கார் நிறுத்துமிடங்களை நிரப்புகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் தனிமை என்னை துணைக்கு அழைக்கிறது -கார்த்திக்வேலு

குருட்டு ஈ

'Jacqueline in a Straw Hat' by Picasso ஆஸ்பத்திரியில் வெண்தொட்டிலில் சுற்றுகிறது இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின் மூச்சொலி பார்க்கப் பயமாக இருக்கிறது சுவரில் தெரியும் பல்லி சீக்கிரம் கவ்விக் கொண்டு போய்விடாதா என் இதயத்தில் சுற்றும் குருட்டு ஈயை -தேவதச்சன் The Blind Fly The buzzing breath Of a dying child Circles the white hospital cot It's a scary thing To watch. Wouldn't the Gecko on... Continue Reading →

பொன் பூத்தல்

எடுத்து வைக்கவோ செருகிக் கொள்ளவோ இயலும். சூட வேண்டும் ஒரு முகூர்த்தம் பூவும் இருந்து கூந்தலும் இருந்துவிட்டால் சூடிக் கொண்டு விட இயலாது. -இசை The Glow To wear Or to bedeck One could do. But to adore One needs auspiciousness. To have the hair And the flower Is just not enough.

கடைசி இலை

அப்படி என்னதான் இருக்கிறது ஒரு மரத்தின் கடைசி இலைக்கு தன்னைப் பற்றி பீற்றிக்கொள்ள ? சரி - இப்படி கற்பனை செய்யுங்கள்.  ஒரு சிறிய எறும்பு தன்னந்தனியே ஒரு மரத்தடியே ஊர்ந்து செல்வதை. கற்பனை செய்யுங்கள் காற்றில் அலைக்கழிந்தாலும் அந்த இலை அந்த சிறிய எறும்பை வெயிலின் சுட்டெரிப்பில் இருந்து காத்து நிற்பதை. காற்று அதை மரத்திலிருந்து பிய்த்து எறிந்துவிட்டாலும் கூட பாதகமில்லை. அது மட்டும் அந்த எறும்பின் மீது ஒரு பெரிய பச்சை குடையைப் போலே விழுமானால் அப்படி மிக மெதுவாக விழுந்து பின் அதன் தாய் எறும்பு வந்து ஒரு விஷமக்கார புன்னகையுடன், தன் குழந்தையை தன்னிடமிருந்து ஓளித்து வைத்திருந்ததற்காக‌ அதனுடன் பொய்க்கோபம் கொள்ள காத்திருக்குமானால் ‍- வேறென்ன வேண்டும் ஒரு இலைக்கு?. -வீரான்குட்டி (மலையாளக் கவிஞர் வீரான் குட்டியின் கவிதை ஒன்றின் ஆங்கில வழி  மொழிபெயர்ப்பு ) https://www.poetryinternational.org/pi/poem/9993/auto/0/0/Veerankutty/The-Last-Leaf/en/tile?fbclid=IwAR3S7t41rgS7DQvUkdWmql4TvsAtAe2ep438EXRMqHdLer94BYgzRDY2TuQ #VeeranKutty #MalayalamPoems  #Translations #வீரான்குட்டி

மொழிபெயர்த்த மெளனம்

'Man with a child' -by Xu man சொல், என்னிடம் பேச என்ன தயக்கம். சொல் ... நீ எப்போதாவது சிரித்தால் சொல். அது என்ன ஒரு சந்தோஷமென்று சொல். சிரி... சிரிப்போம். உன்னுடைய வருத்தங்களை பேசு புரியாத சோகங்களையும் . எதிர்பாராத நேரத்தில் உன் நெஞ்சடைப்பதென்னவென்று சொல். மனதுடைந்த நாட்களை மற நீ காதலினால் எழுதியன உரக்கப் படி. பயங்களைச் சொல் நீ பார்த்த அதிசயங்களைச் சொல் கதவடிக்கும் கோபங்களைச் சொல் ஆத்திரங்கள்,ஆர்வங்கள்,அழுகைகளைப் பகிர். பேச எதுவுமில்லையெனில் ? பாடு ,மெல்லிய குரலில். அல்லது குழந்தைகளுக்கு குளிப்பாட்டி,தலைசீவி சட்டை அணிவித்து விடு. அவர்களுடன் நடை பயில் இப்படியாக எதுவும் செய்த பின் தூங்கிப்போ சூரியனுக்கு முதுகைக் காட்டியபடி. (2001/திண்ணை )

விக்ரமாதித்யன்

சுமைதாளாது முறிந்ததென் அச்சு பால் விஷமானது போலென் இருப்பு கர்ணனைக் கொன்றதுபோல கொல்கிறார்கள் என்னையும். - விக்ரமாதித்யன் Unable to bear the weight - broke , my axle. Like milk turning to poison - I exist. They're killing me like they killed Karna. -Vikramadhityan

Blog at WordPress.com.

Up ↑