காட்சிப் பிழை

வில்லியம் பிளேக் எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி 1950 களில் சைக்டெலிக்ஸ் எனப்படும் உளமயக்கு மருந்துக்களுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு அதன் மூலம் மனம் மேலான விழிப்புணர்வு நிலையை அடைய முடியுமா என்று தன்னை தானே சோதித்துக்கொண்டார் .அந்த அனுபவங்களை பின்னர் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார் அதன் தலைப்பாக அவர் தேர்ந்தெடுத்த வரி தான் "The Doors of Perception" . வில்லியம் பிளேக்கின் கவிதை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்ட வரி. பின்னர் 1965 ல் , ஆல்டஸ் ஹக்ஸ்லியின்... Continue Reading →

பயணமும் இசையும் உங்களுக்கு எந்த அளவு முக்கியம்?

"நான் வீட்டுக்குள் இருக்கும்போது சுவாதீனமாக நானாக இருக்கிறேன். பயணிக்கும்போது வேறு ஆளாக மாறிவிடுகிறேன். என் வீட்டைவிட்டுத் தள்ளிப் போகப்போக எனக்கே நான் அந்நியமாகி விடுகிறேன். அப்படியான தொலைவு உள்ளே கிடைக்கிறது. நானும், ஜெயமோகனும், வசந்த குமாரும் ஹரித்துவாரில் கும்பமேளா பார்ப்பதற்காகப் போயிருந்தோம். ராத்திரி இரண்டு மணிவரை குடுகுடுப்பைக்காரன்போல, தலையில் உருமால் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன். என் தெருவில் அதைச் செய்ய மாட்டேன். கங்கைக் கரையில் இருந்த நடைபாதையில் படுத்துத் தூங்கினோம். இப்படி நான் ஒரு அநாமதேயமாக ஆவது எனது... Continue Reading →

What’s wrong with our police ?

ஒற்றை வரியில் சொல்வதென்றால் இந்திய போலீஸ் காலனியாதிக்க போலீஸ் , தமிழ்நாட்டு போலீஸ் விதிவிலக்கல்ல .இதை அவர்கள் சாத்தான்குளம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயத்தில் நடந்துகொண்டதை வைத்து மட்டும் சொல்லவில்லை , உண்மையிலேயே போலீஸ்துறையின் ஒட்டுமொத்த கட்டுமானமுமே அப்படியானதுதான். ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் கீழ் நம் நாடு இருந்தபோதுதான் தான் இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்திய போலீஸ் சட்டம் கொண்டுவரப்பட்டது ,கிட்டத்தட்ட 160 வருடங்களுக்கு முன். ஆங்கிலேய அரசின் தேவைகளுக்கும் , வசதிக்கும் ஏற்ப எழுதப்பட்ட ஒரு சட்டத்தை தான்... Continue Reading →

அபரன்

Photo credit: Pon Prabakaran "சிறிதும் அறிந்திராத ஒருவரை நீங்கள் காண்கையில் அவர் உங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருக்கிறார். உங்களுக்கு உங்கள் உடல் இருக்கிறது, அவருக்கு அவருடையது. இருவரும் ஒருவரையொருவர் காண்கையில் ஏதோ ஓர் இனிமையை நீங்கள் உணர்கிறீர்கள். அம்மனிதர் மகிழ்ச்சி தரும் பொருளாகிறார். ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டு அண்மையை ரசிக்கிறீர்கள். இருவரும் நான் இன்னார் என்பதை சொல்லிக்கொள்கிறீர்கள். அங்கு இரண்டு ‘நான்’-கள் உள்ளன. நான் என்பதும் நீ என்பதும். நீ என்பதும் நான் என்பதும். இரு... Continue Reading →

வாழ்க்கையென்னும் விசித்திரம்

நீதிமன்ற கிளார்க்காக பணி புரியும் இருபத்து மூன்று வயது ஆஷ்லி அவர் பணி புரியும் கோர்ட்டில் மேஜிஸ்டிரேட்டாக இருக்கும் ரோட்னி ஹிக்கின்ஸ் என்பவர் மீது காதல் வயப்படுகிறார் .ரோட்னிக்கு வயது 68 , ஆஷ்லியை விட இரண்டு மடங்கு வயதில் மூத்தவர் . சரி வயது ஒரு பக்கம் இருக்கட்டும் , பரஸ்பரம் காதல் ,எனவே இதை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார்கள் .நிச்சயதார்த்தம் மோதிரம் எல்லாம் அளித்து , அந்த செய்தி பத்திரிக்கைகளைல் பரவலாக பேசப்பட்டது. இதெல்லாம் நடந்தது... Continue Reading →

பில் & மெலிண்டா கேட்ஸ்

(Image Credit:National Geography ) சமீபத்தில் கொரோனா வாக்சின் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தம் பட்டிருக்கிறார் என்று ஒரு சதிச்செய்தி ( conspiracy ) இணையத்தில் உலாவியபடி இருந்தது , அதை நண்பர்கள் வட்டத்திலே சிலர் நம்பவும் செய்தார்கள் . அப்போதே பில் கேட்ஸ் பெளண்டேஷன் குறித்து எழுத எண்ணியிருந்தேன் . எழுதியிருக்க வேண்டும் , இப்பொது ஒரு வருத்தமான சூழலில் அதை எழுதவேண்டியதாகிப் போனது. இன்று பில் கேட்ஸும்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑