கர்ணன் – காலைச் சுடரொளி

நேற்று கர்ணன் படம் பார்த்தேன். மேலோட்டமாக இந்த படம் குறித்த பல விமர்சனங்களை முன்னரே வாசித்திருந்தேன் . ஆனால் படத்தை பார்த்தபிறகு படமும் விமர்சனங்களுக்கும் முற்றிலும் வெவ்வேறு தளங்களில் செயல்படுவதாக தோன்றியது . இந்தப் படம் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்ட ,கதை நிகழும் வருடம் குறித்த விமர்சனத்துக்கு படத்துக்கு வெளியே ஒரு அரசியல் முக்கியத்துவம் இருந்திருக்கலாம். ஆனால் படத்தின் மீதோ , படம் சொல்ல வந்த விஷயத்தின் மீதோ அது பெரிய தாக்கத்தை செலுத்தியதாகத் தெரியவில்லை. மாரி... Continue Reading →

நம்மை நோக்கும் சாதி

Modi & A Beer Modi & A Beer படம் பார்த்தேன் , வழக்கமான சாதி சார்ந்த விவாதத்தை காதலில் இருக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு இடையே நிகழும் உரையாடலின் ஊடே பொதிந்து வைத்திருக்கிறார்கள் . புத்திசாலித்தனமான அணுகுமுறை . சாதி குறித்து பரஸ்பரம் பேசிக்கொள்ள இருதரப்பு மிக அணுக்கமான உறவில் அல்லது புரிதலில் இருக்க வேண்டும் , இல்லையென்றால் அந்த உரையாடல் எந்த நிமிடமும் ,தவறுதலாக பட்டாலும் வெடித்துச் சிதறும் கண்ணிவெடியாகவே அமையும். இதையே... Continue Reading →

தேரில் வந்த ராஜகுமாரன்

அமெரிக்காவின் அடிமைகளாக இருந்த கருப்பர்கள் முதல் முதலாக அமெரிக்க சமூகத்தின் மையத்துக்குள் வந்தது அவர்களின் இசை மூலமாகத்தான். ஜாஸ் , காஸ்பல் இசை , ப்ளூஸ் என்று 50 - 60 களில் பெரும் சமூக எழுச்சியை உருவாக்கியதில் அவர்களின் இசைக்கு பெரும் பங்கு உண்டு. இந்த இசை வடிவங்களின் மூலம் அவர்கள் தங்களின் தனித்துவ அடையாளத்தை திரட்டிக்கொண்டார்கள் .அதே சமயம் ஒடுக்குமுறையில் அழுத்தப்பட்ட வாழ்விலிருந்து பீறிடும் சுதந்திரத்திற்கான விழைவாகவும் அது வெளிப்பட்டது. பள்ளிக்கூடங்களிலும் , உணவு... Continue Reading →

‘C/o Kancharapalem’

வித்தியாசமான தெலுங்கு படம் ஒன்று , 2018 ல் எடுக்கப்பட்டது ,சமீபத்தில் தான் பார்த்தேன் . வித்தியாசம் என்றால் வழக்கமான கமர்சியல் தெலுங்கு படங்கள் போலும் இல்லாமலும் அதே சமயம் முற்றிலும் வித்தியாசமாக எடுக்கிறேன் பேர்வழி என்று மெனக்கெடாமலும் எடுக்கப்பட்ட படம் . ஆந்தாலஜி வடிவிலான கதை . நான்கு இழைகளாக சொல்லப்பட்ட காதல் கதைகள் , இறுதியில அவை மிக அழகாக முடிச்சிடப்பட்டிருக்கும் .இவைகளை காதல் கதைகள் என்று சொல்வது கொஞ்சம் தட்டையான விளக்கம் தான்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑