கர்ணன் – காலைச் சுடரொளி

நேற்று கர்ணன் படம் பார்த்தேன். மேலோட்டமாக இந்த படம் குறித்த பல விமர்சனங்களை முன்னரே வாசித்திருந்தேன் . ஆனால் படத்தை பார்த்தபிறகு படமும் விமர்சனங்களுக்கும் முற்றிலும் வெவ்வேறு தளங்களில் செயல்படுவதாக தோன்றியது . இந்தப் படம் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்ட ,கதை நிகழும் வருடம் குறித்த விமர்சனத்துக்கு படத்துக்கு வெளியே ஒரு அரசியல் முக்கியத்துவம் இருந்திருக்கலாம். ஆனால் படத்தின் மீதோ , படம் சொல்ல வந்த விஷயத்தின் மீதோ அது பெரிய தாக்கத்தை செலுத்தியதாகத் தெரியவில்லை. மாரி... Continue Reading →

வாழ்க்கையென்னும் விசித்திரம்

நீதிமன்ற கிளார்க்காக பணி புரியும் இருபத்து மூன்று வயது ஆஷ்லி அவர் பணி புரியும் கோர்ட்டில் மேஜிஸ்டிரேட்டாக இருக்கும் ரோட்னி ஹிக்கின்ஸ் என்பவர் மீது காதல் வயப்படுகிறார் .ரோட்னிக்கு வயது 68 , ஆஷ்லியை விட இரண்டு மடங்கு வயதில் மூத்தவர் . சரி வயது ஒரு பக்கம் இருக்கட்டும் , பரஸ்பரம் காதல் ,எனவே இதை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார்கள் .நிச்சயதார்த்தம் மோதிரம் எல்லாம் அளித்து , அந்த செய்தி பத்திரிக்கைகளைல் பரவலாக பேசப்பட்டது. இதெல்லாம் நடந்தது... Continue Reading →

சுயாதீன தரப்பு

இந்த ஒரு வருடத்தில் தமிழக நிகழ்வுகளையும் அது குறித்த பேஸ்புக் விவாதங்களையும் தொடர்ந்து கவனித்து வந்ததில் ஒரு புரிதல் கிட்டியிருக்கிறது . தமிழ் நாட்டில் கலை , இலக்கியம் , கல்வி , மொழி , இசை , சினிமா , சிந்தனை , அரசியல் , ஆடு, மாடு, கோழி என்று எதை எடுத்துக்கொண்டாலும் அந்த தளத்தில் முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் இறுதியாக இரண்டு தரப்பாக பிரிந்து நிற்பதையே பார்க்கிறேன் . ஒருபுறம் திமுக ஆதரவு நிலைப்பாடு... Continue Reading →

நம்மை நோக்கும் சாதி

Modi & A Beer Modi & A Beer படம் பார்த்தேன் , வழக்கமான சாதி சார்ந்த விவாதத்தை காதலில் இருக்கும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு இடையே நிகழும் உரையாடலின் ஊடே பொதிந்து வைத்திருக்கிறார்கள் . புத்திசாலித்தனமான அணுகுமுறை . சாதி குறித்து பரஸ்பரம் பேசிக்கொள்ள இருதரப்பு மிக அணுக்கமான உறவில் அல்லது புரிதலில் இருக்க வேண்டும் , இல்லையென்றால் அந்த உரையாடல் எந்த நிமிடமும் ,தவறுதலாக பட்டாலும் வெடித்துச் சிதறும் கண்ணிவெடியாகவே அமையும். இதையே... Continue Reading →

வீடியோவும் விஷச்சுழற்சியும்

Minneapolis Riots சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் மினியாபொலீஸ் நகரத்தில் ஒரு கருப்பினத்தவர் போலீஸ் கைது நடவடிக்கையின் போது மரணித்த (கொல்லபட்ட ! ) வீடியோ பார்த்ததும் , முதலில் தோன்றியது ராட்னி கிங் சம்பவம்தான் . லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் கைது முயற்சியை எதிர்த்ததற்காக ராட்னி கிங் என்னும் கருப்பினத்தவர் நாலு போலீசாரால் மிகக் கடுமையாக தாக்கபட்டார்.இந்த நிகழ்ச்சி உலகளாவிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இது நடந்தது 1991 ல். அப்போதெல்லாம் இன்று போல எல்லோர்... Continue Reading →

அம்பேத்கரின் வரலாற்று பார்வை

Egalitarians அமைப்பின் சார்பாக அம்பேத்கர் குறித்து ஜெ ஆற்றியிருக்கும் இந்த உரை முக்கியமானது . பெரும் ஆளுமைகளை நாம் பொதுவாக ஒருவாறு சுருக்கி திரட்டி வலுவான ஒற்றை அடையாளமாக ஆக்கிக்கொள்வது இயல்புதான் . காந்தி என்றால் அகிம்சை , போஸ் என்றால் வீரம் என்பது போல . ஒருவர் முக்கியமாக எதற்காக நின்றார் ,எதில் சிறந்து விளங்கினார் , எதற்காக பாடுபட்டார் எவ்விதம் வெளிப்பட்டார் என்பது ஒரு ஒற்றை அடையாளமாக இருக்கும்போது தான் அதன் மூலம் பெரும்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑