இன்னிசை என்பார்கள் அல்லவா அது இது போன்ற பாடல்களை குறிக்கத்தான் என்று நினைக்கிறேன். எஸ் ஜானகியின் குரலில் இயல்பாகவே ஒரு மழலை இருக்கும் , இது அவர் இளமையில் பாடியது இன்னுமே கூட கொஞ்சலாக இருக்கும்.இந்தப் படம் வந்தது 1964 ல் .'தச்சேளி ஒதேனன்' - கேரள வடகராவின் பதினாராம் நூற்றாண்டு வீர நாயகர்களில் ஒருவர் ,பல வடக்கன் பாட்டுகள் இவரை நாயகனாகக் கொண்டு புனையப்பட்டவை , அவரை குறித்த படம் இது. பாடல் வரிகள் பி.பாஸ்கரன்... Continue Reading →
மேகம் திறந்துகொண்டு
ஏற்கனவே புகழ் பெற்ற பாடல்களை கவர் செய்கிறேன் ரிப்ரைஸ் செய்கிறேன் என்று வரும் பெரும்பாலான பாடல்களின் சொதப்பலை பார்த்து நொந்து போயிருக்கும் தருணங்களில் இது போன்ற பாடல்களை கேட்கக்கிடைப்பது அப்படியே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறது. ஏற்கனவே வெட்டி செதுக்கப்பட்ட வைரத்தை மேலும் மிளிரச்செய்வேன் என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல.அந்த படைப்பின் ஜீவனுக்குள் முதலில் போக வேண்டும் பின் அதில் ஒரு கலைஞனாக உணரும் இன்ஸ்பிரேஷனை கொண்டு பாடலை அதன் மைய அழகியல் குலையாமல் ,... Continue Reading →
தேரில் வந்த ராஜகுமாரன்
அமெரிக்காவின் அடிமைகளாக இருந்த கருப்பர்கள் முதல் முதலாக அமெரிக்க சமூகத்தின் மையத்துக்குள் வந்தது அவர்களின் இசை மூலமாகத்தான். ஜாஸ் , காஸ்பல் இசை , ப்ளூஸ் என்று 50 - 60 களில் பெரும் சமூக எழுச்சியை உருவாக்கியதில் அவர்களின் இசைக்கு பெரும் பங்கு உண்டு. இந்த இசை வடிவங்களின் மூலம் அவர்கள் தங்களின் தனித்துவ அடையாளத்தை திரட்டிக்கொண்டார்கள் .அதே சமயம் ஒடுக்குமுறையில் அழுத்தப்பட்ட வாழ்விலிருந்து பீறிடும் சுதந்திரத்திற்கான விழைவாகவும் அது வெளிப்பட்டது. பள்ளிக்கூடங்களிலும் , உணவு... Continue Reading →
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே ..
தாத்தா அளவுக்கே அந்த ஹார்மோனியத்துக்கு வயதிருக்கும் போல , ஆனால் என்ன அற்புதமான வாசிப்பு . தன்னுள் எஞ்சி இருக்கும் அத்தனையையும் ஒன்றுதிரட்டி இந்த வாசிப்புக்கு அளிப்பது போல தோன்றியது .பாடலின் முதலில் ஆரம்பிக்கும் புல்லாங்குழல் இசையை ஹார்மோனியத்தில் கொண்டு வரும் போதே , அடடே போட வைத்துவிடுகிறார் . இந்தப் பாடலில் வெளிப்படும் TMS குரலின் கம்பீரத்தையும் புல்லாங்குழலின் கனிவையும் ஒருசேர தன் வாசிப்பில் தவழவிடுகிறார். 1:00 லிருந்து 1:30 வரை முதல் இண்டர்லூட் கேட்டுப்பாருங்கள்... Continue Reading →