சுகந்தரும் சுகந்தமே

மலேசிய வாசுதேவனின் மனதில் நிற்கும் பாடல்களில் ஒன்று , அவரின் versatality க்கு நல்ல சான்று இந்தப் பாடல் . இந்த பாட்டில் வரும் அந்த சின்னப் பெண் அழகு , இன்னும் சினிமாக்களில் நடித்துக்கொண்டிருக்காரா தெரியவில்லை . இதே பாட்டை அவரின் மகன் யுகேந்திரன் கவர் செய்திருந்ததையும் சமீபத்தில் கேட்டேன் . Very refreshing arrangement . ஒரிஜினல் பாடலில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒரு சின்ன சோகம் இழையோடும் , ஆனால் இசை உற்சாகமாக... Continue Reading →

நண்பர்கள் இல்லா நகரம்

ஜக்ஜித் சிங் கசல் வடிவம் கவிதைக்கும் பாடலுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவம் , பிற வடிவங்களை விட பாடல் வரிகள் மேல் அதிகம் கவனம் குவியும் வடிவம்.மேலும் இசைக்கருவிகள் பெரிதும் சார்ந்திராமல் பாடகர் தன் கற்பனைக்கு ஏற்ப வரிகளை விரித்தும் , நீட்டித்தும் , இட்டு நிரப்ப அனுமதியளிப்பது . சமயத்தில் கவிதையாக கூட சில வரிகளை பாடகர் வாசிப்பதும் உண்டு ,பாடலின் மொத்த creative & performance control உம் பாடகர் கையில் இருக்கும் .ஜக்ஜித்... Continue Reading →

Bheegi Bheegi

அத்னான் சாமி பதினைந்து வருடங்களுக்கு முன் நண்பர்கள் இணைந்து ஒரு நீண்ட ரோட் டிரிப் போயிருந்தோம். கிறிஸ்துமஸ் புத்தாண்டு இடைவெளியில். மொத்தம் 18 நாட்கள், 7000 சொச்சம் கி.மீ கள், ஆஸியின் நான்கில் ஒரு பங்கை கவர் செய்தோம் என்று சொல்லலாம். ஸ்மார்ட் போனோ ,யூடியூபோ இருந்திராத காலம், பாட்டு கேட்க வேண்டுமானல் CD தான் .இந்த பயணத்தின் போது ஓடவிட்டு தேய்த்த CD களில் ஒன்றுதான் அத்னான் சாமியின் ‘ Bheegi Bheegi’ ஆல்பம் .ஆஸி... Continue Reading →

Sanson ki mala pe

நுஸ்ரத் ஃபதே அலி கான் (Image Credit :BBC) இனி வாழ்நாள் முழுதும் ஒரே ஒரு பாடகரைத்தான் கேட்க முடியும் , யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டால் தயங்காமல் நுஸ்ரத் ஃபதே அலி கான் அவர்களை தான் சொல்லுவேன். சாசோன் கீ மாலா பே - கண்ணனை நாயகனாக வைத்து மீராபாய் எழுதிய பஜன் . இதை நுஸ்ரத் அலி கான் அவர்கள் இந்தியா வந்த போது கவ்வாலி வடிவில் பாடியது பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்... Continue Reading →

மக்தூமின் மலர்கள்

சுப்ரியா பதக் - ஃபரூக் ஷேய்க் Bazaar படத்தில் வரும் அற்புதமான கசல் . இதை எழுதிய மக்தூம் மொஹியுதீன் , பெரிய புரட்சிகர கவிஞராக இருந்திருக்கிறார். தொழிற் சங்கங்களில் இருந்துகொண்டு தொடர் கிளர்ச்சிகளை நடத்தியிருக்கிறார். ஹைதராபாத் சமஸ்தானத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து நிஜாமுக்கு எதிரான ஜமீந்தாரி ஒழிப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றிருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கம்யூனிஸ்ட கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றிருக்கிறார்.இந்த பாடலுக்கு அவரின் களப்பணிக்கும் சம்பந்தமே இல்லாதது... Continue Reading →

கூடுதே பாடுதே

SPB பாட்டிலேயே அத்தனை பாவங்களையும் கொண்டு வந்துவிடுவார் என்று சொல்லுவார்கள், அதாவது தனியாக இசையே தேவையில்லை என்பதாக . சினிமா பாடல்களுக்கு இயல்பாகவே அந்த தேவை இருக்கிறது , இங்கு கதையின் போக்கோடு தான் இசை வருகிறது என்பதால் சினிமாவின் உணர்ச்சிப்போக்கிற்கு அது ஒத்துழைப்பதாக அமைய வேண்டியிருக்கு . இசையின் உணர்ச்சிகள் கதையோடும் கதையின் உணர்ச்சிகள் இசையோடு பின்னி பிணைந்த complex அழகியல் இது. மரபிசைக்கு இந்த நேரடி தேவை இல்லை அதன் emotional content என்பது... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑