பீஸ் லாக் கரோர் !

(போன வருடம் இதே நாள் எழுதிய பதிவு ) நேற்று மோடி அவர்கள் ஆற்றிய உரை கேட்டேன் , வழக்கமான சுற்றி வளைத்தல்களை தாண்டி நேரே "ஆத்மநிர்பர்" அறிவிப்புக்கு போய் விட்டேன். உரை ஆரம்பித்து 18 நிமிடம் கழித்து தான் மேட்டரே வருது , நல்ல வேளை யூடியிபில் ஒரு புண்ணியவான் நேரே இங்கே போ என்று டைம் ஸ்டாம்மையே கொடுத்துவிட்டார். முதலில் நல்ல விஷயம் Better late than never என்னும் அளவில் இந்த அறிவிப்பு... Continue Reading →

இலவச பயணமும் பெண்களும்

ஒட்டு மொத்த பொது போக்குவரத்தில் பேருந்து இணைப்புகளை 'கடைசி கண்ணி' என்று சொல்வார்கள் அதாவது last mile connectivity .பொது போக்குவரத்தில் அதிகமாகவும் அன்றாடமும் பயன்படுத்தப்படுவது இந்த 'இறுதி மைல்' தொடர்பே .பெரும்பாலான நம் அன்றாட பயணங்கள் ஒரு 50-100 கிலோமீட்டருக்கும் நிகழ்த்தப்படும் பயணங்களாகவே இருக்கும்.இதை பூர்த்தி செய்ய பேருந்துகளை விட சிறப்பான ஒரு வழி இல்லை என்று தான் சொல்லவேண்டும் அமெரிக்க நகரங்கள் கார்களை மையமா வைத்து வடிவமைக்கப்பட்டவை என்பார்கள் , அது உண்மை தான்... Continue Reading →

தேர்தல் முடிவுகள்

பல மாநிலங்களை சார்ந்த பல கோடி மக்கள் வாக்களித்ததில் அடினாதமான என்ன எழுந்து வருகிறது என்று யோசித்துப்பார்த்தால் அது பிஜேபியை மறுக்கும் ஒரு நிலைப்பாடு என்று சொல்லலாம் . கேரளாவில் முன்னர் இருந்த ஒற்றை தொகுதியையும் இம்முறை இழந்தது . கடினமான போட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்ட வங்காளத்தில் கூட மம்தா 48 % வாக்குகளை பெற்று பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் . தமிழகத்தில் பாஜாகாவுடன் கூட்டு சேராமல் இருந்திருந்தால் அதிமுகவுக்கு இன்னுமே கூட வாக்குகள் அதிகம்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑