
மலேசிய வாசுதேவனின் மனதில் நிற்கும் பாடல்களில் ஒன்று , அவரின் versatality க்கு நல்ல சான்று இந்தப் பாடல் . இந்த பாட்டில் வரும் அந்த சின்னப் பெண் அழகு , இன்னும் சினிமாக்களில் நடித்துக்கொண்டிருக்காரா தெரியவில்லை .
இதே பாட்டை அவரின் மகன் யுகேந்திரன் கவர் செய்திருந்ததையும் சமீபத்தில் கேட்டேன் . Very refreshing arrangement . ஒரிஜினல் பாடலில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒரு சின்ன சோகம் இழையோடும் , ஆனால் இசை உற்சாகமாக இருக்கும் , சொல்லப்போனால் கதையில் பாடல் தருணம் அவ்வாறானதுதான் .
யுகேந்திரன் பாடியதில் இசை வித்தியாசமானது , பேஸ் கித்தாரும் , கித்தாரும் தான் மையம் , பாடலோடு சேர்ந்து தொடர்ந்து வரும் இசை ( I mean not the interude style ) . அதை அவர் அவுட்டோரில் புல்வெளியில் அமர்ந்து கொண்டு பாடும் போது ,புத்துணர்வளிக்கும் ஒன்றாக மாறிவிடுகிறது .
பாவை பூவை காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை மறைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன் ஓ
என்ற வரிகளில் அப்பாவின் குரலை நெருங்குகிறார்.
தமிழ் சினிமாக்களில் எத்தனையோ பாடல்கள் இது போன்று இன்றைக்காக இசையில் , சினிமாவின் சட்டகங்களுக்கு வெளியே மறுவடிவாக்க முடியும் , அதை திறம்பட செய்வது ஒரு சவால் , இந்த பாடல் அந்த சவாலை நன்கு எதிர்கொண்டிருக்கிறது . We need more like this .
#Yugendran#MalaysiaVasudevan#VaguMazan#VaaVaaVasanthame#Ilayaraja#Tamilsongs
யுகேந்திரன்
Leave a Reply