காட்சிப் பிழை

வில்லியம் பிளேக்

எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி 1950 களில் சைக்டெலிக்ஸ் எனப்படும் உளமயக்கு மருந்துக்களுக்கு தன்னை ஆட்படுத்திக்கொண்டு அதன் மூலம் மனம் மேலான விழிப்புணர்வு நிலையை அடைய முடியுமா என்று தன்னை தானே சோதித்துக்கொண்டார் .அந்த அனுபவங்களை பின்னர் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார் அதன் தலைப்பாக அவர் தேர்ந்தெடுத்த வரி தான் “The Doors of Perception” . வில்லியம் பிளேக்கின் கவிதை ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்ட வரி.

பின்னர் 1965 ல் , ஆல்டஸ் ஹக்ஸ்லியின் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டும் , ஜிம் மோரிசனை முதன்மை பாடகராகக் கொண்டு உருவாகிய அமெரிக்க ராக் இசைக்குழுவும் இதையே தங்கள் குழுவின் பெயராக சூட்டிக்கொண்டனர் ,”The Doors” என்று .ஜிம் மோரிசனின் குழு புகழின் உச்சியில் இருந்த அதே சமயம் தான் மேற்கில் ஹிப்பி அலையும் அதன் உச்சத்தில் இருந்தது – the swinging sixties. இவை உருவாக்கிய எதிர்கலாச்சார போக்கில் உளமயக்கு மருத்துகள் இன்னும் கூட தீவிரமாக பயன்படுத்தும் போக்கு உருவாக ஆரம்பித்தது .

ஆல்டஸ் ஹைக்ஸ்லி

பிற்காலத்தில் , தனது நாவல் ஒன்றில் , ஹக்ஸ்லி இந்த மருந்துகள் ‘toxic short cuts to self-transcendence’ என்று குறிப்பிட்டிருப்பார்.ஜிம் மோரிசன் தனது 27 வது வயதில் பாரீசில் இறந்தார் , ஹராயின் ஓவர்டோஸ் .பிளேக் கவிதையின் பிரபலமான அந்த இரண்டு வரிகள் இப்படிப் போகும் .

“If the doors of perception were cleansed every thing would appear to man as it is, infinite.

For man has closed himself up, til he sees all things through narrow chinks of his cavern.”

-William Blake ( The Marriage of Heaven and Hell)

வில்லியம் பிளேக்கின் இந்த கவிதை கூட இன்னொரு புத்தகத்தின் மீதான விமர்சனமாக எழுதப்பட்டதே .ஸ்வீடன்பெர்கின் என்ற இறையியலாளர் ‘Heaven and Hell’ புத்தகத்தில் உலகை நன்மை தீமை என்ற இருமைகளாக கட்டமைக்கும் மரபான போக்கை வலியுறுத்தியிருப்பார்.

ஜிம் மோரிசன்

அதை மறுக்கும் பார்வையில் எழுதப்பட்ட புத்தம் வில்லியம் பிளேக்கினுடையது. அதனால் தான் தலைப்பில் கூடவே Marriage எனபதையும் சேர்த்துக்கொண்டிருப்பார் . நன்மையை நியாயங்களுக்கு கட்டுப்பட்ட நிலைச்சக்தியாகவும் தீமை என்பதை ஆற்றலின் ( விழைவின் ) இயக்கமாகவும் உருவகித்திருப்பார்.

வரலாற்றில் ஒரு கருத்தோட்டம் எப்படி எல்லாம் உருமாறி வந்திருக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது .ஒரு இறையியலாளனிடம் ஆரம்பித்து , ஒரு கவிஞனால் மறுக்கப்பட்டு , ஒரு எழுத்தாளனால் ஆராயப்பட்டு பின் ஒரு பாடகனில் சென்று அடங்கியிருக்கிறது.

எப்படியெல்லாமோ தட்டித் தட்டி கதவுகளை திறந்திருக்கிறார்கள் ஆனால் பார்க்க வேண்டிய விஷயம் என்னவோ உள்ளே தான் இருந்திருக்கிறது போலும்.#WilliamBlake#DoorsOfPerception#AldousHuxley#TheDoors

(17-July-2020)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: