
ஒரு வரியில் சொல்வதென்றால் படத்தில் என்ன பலமோ அதுவே பலவீனமாகவும் போய்விட்டது. படத்தின் ஈர்ப்பு அதன் அடர்த்தியான கரு ,அது உருவாக்கிய ஆர்வம் எதிர்பார்ப்பு ஆனால் அதை சரியாக ஹேண்டில் செய்ய முடியாத போது எதிர்பார்ப்பே பெரும் எடையாகி படத்தை கீழிறக்கிவிடுகிறது.
கலை , காதல் , ஆன்மீகம் என்று மூன்றுமே தன்னளவில் ஆழமும் முழுமையும் கொண்ட சப்ஜெக்ட்ஸ் , இவைகளுக்கு இடையே உரையாடலையும் இணைவையும் உருவாக்கி ஒரு ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய டைரக்டருக்குமே பெரிய சவால் தான் , அதுவும் இரண்டு மணி நேரத்திற்குள் என்பது மிகக்கடினம் .
படத்தின் ஹைலைட் சுஜாதா தான் . வாய்பேச முடியாத , நுண்ணுணர்வும் , துறுதுறுப்பும் கொண்ட ஒரு பெண்ணின் உணர்வுகளை அழகாகவும் அதீதம் இல்லாமலும் பிரதிபலித்திருப்பார் ,தனது வயதை கூட மிக உற்சாகமாக mime செய்து காட்டும் கேரக்டர். மிக எளிதில் overdo செய்து சொதப்பியிருக்கக்கூடிய பாத்திரம் , beautifully restrained performance without losing it’s charm.
சுஃபியை பஸ்ஸில் முதல் முறை சந்திக்கும்போது இருக்கு குறுகுறுப்பான ஆர்வமாகட்டும் , தன்னை சந்திக்க வந்திருக்கும் எதிர்கால கணவனின் சுற்றத்தாரை முகமன் கூறி கண நொடியில் கண்களை சுழற்றிக்கொள்வதாகட்டும் . கண்ணாடி முன் முக்காடிட்டு தன்னை தானே கண்டு வெட்க கொள்ளும் தருணமாகட்டும் , இந்தியா திரும்பும் போது அழுது களைத்து மெல்ல அதிர்ந்தபடி வரும் முகமாகட்டும் .. மிக அழகாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் .சூஃபியுடன் தானும் அமர்ந்து தொழுகை செய்வதின் மூலம் தன் காதலை உணர்த்த முயலும் தருணம் தான் உச்சம்.
படத்தில் மற்ற எல்லா விஷயங்களுமே ஒப்பு நோக்க வலுவில்லாமல் தான் இருக்கிறது . சூஃபிக்கும் சுஜாதாவுக்குமான ஈர்புக்கான lead அவ்வளவு சரியாக அமைக்கப்படவில்லை. உஸ்தாதுக்கும் சூஃபிக்குமான பந்தமும் மிக மிக லேசான தீற்றல் தான் . சூஃபி எண்ணும் பிம்பம் அவர் தோற்றத்தில் தெரிகிற அளவு அவரின் குணவார்ப்பில் துலங்கிவரவில்லை.சுஜாதாவின் அப்பா உஸ்தாதிடம் போய் ஏசும் லவ் ஜிகாத் வசனம் so out of place in the movie context .
பல நேரடிவ் எலிமெண்ட்ஸ் ,நன்றாக தொடங்கி பின் சரியாக வளர்த்தெடுக்கப்படாமல் stunt ஆகிவிட்டது . உதாரணமாக whirling க்கும் கதக் நாட்டிய வகைக்கும் உள்ள ஒற்றுமை இணைவுகள் ..இதை இன்னும் கொஞ்சம் விரித்தெடுத்து meditative practice உம் கலையும் எவ்வாறு mutually inspiring or attracting என்று கொண்டு போயிருக்கலாம்.அதே போல சூஃபி மெய்யியல் குறித்த பார்வையாளருக்கு உணர்த்தும் படியான விஷயங்கள் மிக மிக குறைவாகவே இருக்கு.
தினமும் காலை பாங்கு ஒலிக்கு சமயம் சுஜாதா வீட்டில் இருந்து கதக் மூலம் அதை ஒரு அனுபவமாக ஆக்கிக்கொள்வது அழகிய தருணம்.அதே போல உஸ்தாத் வைத்த நாவல் பழ மரம் சூஃபி திரும்ப வரும்போது காய்த்து விழுவது.அந்த ஜெப மாலை நல்ல உருவகம் , படம் முழுதும் இயல்பாகவும் அழகாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் இறுதி காட்சிகளில் சுஜாதா அந்த ஜெபமாலையை தேடி எடுப்பதும் அதை கழுத்தில் அணிந்து கொள்வது , பின்னர் கைகளில் அணிந்துகொள்வதும் , அணைத்துக்கொள்வதுமான ஊசலாட்டங்களை அதிதி நன்றாக வெளிப்படுத்தியிருப்பார்.
அந்த சிற்றோடையும் படம் முழுதும் வெவ்வேறு தருணமங்களில் தாண்டி வரவேண்டிய ஒன்றாகவும் தாண்டிப் போகவேண்டிய ஒன்றாகவும் வந்துகொண்டே இருக்கிறது , இறுதியில் அடித்துச்செல்வதாகவும் . இதெல்லாம் அவ்வப்போது வரும் உச்சங்களானாலும் , வேறு பல இடங்களில் வரும் போதாமையும் , இணைவின்மையும் படத்துக்கு ஒரு கலை ஒருமை கூடிவருவதை தடுத்துவிடுகிறது.
ஆச்சரியகரமாக படத்தில் இன்னுமொரு ஒரிஜினல் தருணம் , சூஃபியை அடக்கம் செய்யும் தருணத்தில் சுஜாதாவின் கணவன் மண் அள்ளிப்போடும் காட்சி .முன் பின் நாமோ , இல்லை அந்த பாத்திரமோ கற்பனை செய்து பார்த்திருக்கமுடியாத சூழல்
விமானத்தில் இருவரும் ஊர் திரும்பும் காட்சி ஒரு குலைவு , அதை தவிர்த்திருக்கலாம்.ஜெப மாலையை சூஃபியுடம் போட்டு மூடிவதோடே முடித்துகொண்டிருக்க வேண்டியது படம். சுஜாதா அந்த கபரில் வளர்ந்து நிற்கும் நன்கு சிவக்கும் மைலாஞ்சி , குருவின் அருள் பழுத்து மேல் விழும் அந்த நாவல்பழம்.எனக்கென்னவோ படம் சுஜாதேயும் சூஃபியுமாகத்தான் மனதில் பதிகிறது.
(13-June-2020)
Leave a Reply