கூடுதே பாடுதே

SPB பாட்டிலேயே அத்தனை பாவங்களையும் கொண்டு வந்துவிடுவார் என்று சொல்லுவார்கள், அதாவது தனியாக இசையே தேவையில்லை என்பதாக . சினிமா பாடல்களுக்கு இயல்பாகவே அந்த தேவை இருக்கிறது , இங்கு கதையின் போக்கோடு தான் இசை வருகிறது என்பதால் சினிமாவின் உணர்ச்சிப்போக்கிற்கு அது ஒத்துழைப்பதாக அமைய வேண்டியிருக்கு . இசையின் உணர்ச்சிகள் கதையோடும் கதையின் உணர்ச்சிகள் இசையோடு பின்னி பிணைந்த complex அழகியல் இது.

மரபிசைக்கு இந்த நேரடி தேவை இல்லை அதன் emotional content என்பது பெரிதும் musicality & performance என்பதையே சார்ந்து இருக்கிறது. இங்கு மரபிசையின் வரைமுறைகளை ஆள்பவரே சிறந்த பாடகர் ஆகிறார்.இங்கு இசையின் அழகியல் என்பது அந்த வடிவத்தின் ( classcial format ) அழகியலே , காலம் காலமாக மீண்டும் மீண்டும் பாடப்பட்டு, ரசிக்கப்பட்டு , நுட்பமாக்கப்பட்டு ,கையளிக்கப்படும் அழகியல்.

திரையிசையின் தேவைகள் வேறு.அதனால் தான் பல புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகர்கள் சினிமாவில் அதே அளவு பிரகாசிக்க முடியவில்லை . திரையிசை என்பது bhava சங்கீதம் . உணர்வு நிலைகளுடன் நேரடியாக பின்ணப்பட்டது ,நேரடியாக உணர்வுகளை (affect) தொடமுடிவது .

இன்று காலை எழுந்ததுமே மனதில் முனுமுனுப்பாய் அந்து அமர்ந்துகொண்ட பாடல் இது 🙂 ‘நேரமே , ராகமே ‘என்ற வார்த்தைகளை SPB தொட்டு இழுக்கும் போதே அந்த பாடலின் joy ஆரம்பித்துவிடுகிறது , ஆரம்ப வரிகளிலேயே மொத்த emotional content ஐ யும் செட் செய்துவிடுவார்.

முதல் வரிகளே இந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை நம் அகத்துக்கு உணர்த்திவிடும். இந்த நகாசு வேலைகள் இசையமைப்பாளரும் பாடகரும் சேர்ந்து செய்வதாக இருக்கலாம் ஆனால் பாடகருக்கு இதில் ஒரு பிரத்தியேக பங்கு இருப்பதாக நினைக்கிறேன், he / she owns that flourish.

(04- July- 2020 )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: