
“சிறிதும் அறிந்திராத ஒருவரை நீங்கள் காண்கையில் அவர் உங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக இருக்கிறார். உங்களுக்கு உங்கள் உடல் இருக்கிறது, அவருக்கு அவருடையது. இருவரும் ஒருவரையொருவர் காண்கையில் ஏதோ ஓர் இனிமையை நீங்கள் உணர்கிறீர்கள். அம்மனிதர் மகிழ்ச்சி தரும் பொருளாகிறார். ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டு அண்மையை ரசிக்கிறீர்கள். இருவரும் நான் இன்னார் என்பதை சொல்லிக்கொள்கிறீர்கள். அங்கு இரண்டு ‘நான்’-கள் உள்ளன. நான் என்பதும் நீ என்பதும். நீ என்பதும் நான் என்பதும். இரு வேறு மனிதர்கள். பின்னர் “இப்படி உட்கார்ந்து நாம் பேசுவோம்” என்கிறீர்கள். இப்போது அந்த ‘நான்’ என்பது மாறிவிட்டது. இரண்டு ‘நான்’-கள் இருந்த இடத்தில் ‘நாம்’ இருக்கிறது. மற்றொருவர் இப்போது மற்றொருவரல்லாதாகிறார். பரன் என்பது வேறொருவர், அபரன் என்பது வேறொருவரல்லாதவர். நானும் நீயும் நாம் என மாறிய பிறகு வேறொருவர் பிறிதொருவரல்லாதவராகிறார்.”
-நாராயண குரு ( ஆத்மோபதேச சதகத்தில் இருந்து )
மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி வெளி வந்த படம் ஒன்றின் பெயர் அபரன் . நடிகர் ஜெயராமின் முதல் படம் , ஆங்கிலத்தில் The Imposter என்று மொழி பெயர்த்திருப்பார்கள்.அந்த படத்தின் கிளைமாக்ஸ் சூட்சமமாக முடிந்திருக்கும் . அபரன் என்பதை மேற்சொன்ன ஆழமான பொருள் கொண்டு பார்க்கையில் படத்தின் முடிவு முற்றிலும் வேறான ஒரு கோணத்தில் திறந்துகொள்கிறது.
(June-2020)
Leave a Reply