இன்னிசையின் ரகசியம்

இன்னிசை என்பார்கள் அல்லவா அது இது போன்ற பாடல்களை குறிக்கத்தான் என்று நினைக்கிறேன். எஸ் ஜானகியின் குரலில் இயல்பாகவே ஒரு மழலை இருக்கும் , இது அவர் இளமையில் பாடியது இன்னுமே கூட கொஞ்சலாக இருக்கும்.இந்தப் படம் வந்தது 1964 ல் .’தச்சேளி ஒதேனன்’ – கேரள வடகராவின் பதினாராம் நூற்றாண்டு வீர நாயகர்களில் ஒருவர் ,பல வடக்கன் பாட்டுகள் இவரை நாயகனாகக் கொண்டு புனையப்பட்டவை , அவரை குறித்த படம் இது.

பாடல் வரிகள் பி.பாஸ்கரன் , காதலனின் வரவை எண்ணி தலைவி அலங்கரித்திக்கொண்டு காத்திருப்பது பற்றியது , எளிய அழகான வரிகள்.

“முடி மேலே கெட்டிவச்சு

துளுநாடன் பட்டுடுத்து

முக்குத்தி சாந்தும் தொட்டு ஞானிருந்நு

கன்னிவயல் வரம்பத்து காலொச்ச கேட்டநேரம்

கல்யாண மணி தீபம் கொளுத்திவச்சு ..”

இசை எம்.ஏஸ் .பாபுராஜ் ,ரொம்ப மினிமலிஸ்டிக்கான இசையமைப்பு .தபேலா , புல்லாங்குழல் ,கோங்கா டிரம்ஸ் அவ்வளவுதான்.இந்தப்பாடலின் அழகே மிக அவசியமான இடங்களை மட்டும் இசை கொண்டு தீட்டி விட்டு மற்ற இடங்களில் குரலில் அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்த வாய்ப்பளித்தது. ஜானகி அந்த வாய்ப்பை மிக அழகான பயன்படுத்திக்கொண்டிருப்பார் .

பாபுராஜ் – ஜானகி இணை பல இனிமையாக பாடல்களை அளித்தது , குறிப்பாக தனிக்குரல் (Solo) பாடல்கள் ,அதுவே நூறு இருக்கும் . அதே போல பாஸ்கரன் அவர்கள் எழுதிய பாடல்களை மிக அதிகப்படியாக பாடியவரும் ஜானகியே . இம்மூவரின் கூட்டணியில் அமைந்திருக்கும் பாடல்களில் தான் இன்னிசை என்பதன் ரகசியம் எங்கோ பொதிந்திருக்கிறது போலும்!

#SJanaki#MSBaburaj#Pbhaskaran#இன்னிசை#MalayalamSongs

(20-June-2020)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: