சீன அத்துமீறல்கள் – 2

Photo Credit :PTI

காதும் காதும் வைத்தது போல , diplomatic ஆக அந்த ஐந்தடியை வாங்கிக்கொண்டு (அதாவது கொடுத்துவிட்டு) , ரெண்டு பேருக்குமே மீசையில மண் ஒட்டவில்லை என்று ஒரு கூட்டறிக்கை விட்டு , கைகுலுக்கி , இதை இரு தரப்புக்கும் வெற்றியாக அறிவித்துக்கொள்வதுதான் சமயோசிதமானது . 2017 ல் டோக்லாமில் கிட்டத்தட்ட இதுதான் நடந்தது.

இப்படி விளையாட்டாக இதை ஒரு கதையாக சொல்வது கிண்டல் அடிப்பது போல தோன்றலாம் ஆனால் இதுதான் நிதர்சனம் . இங்கு சீனாவுக்கு அந்த 65 sq km என்பது கூட முக்கியமில்லை ஆனால் தன்னால் இப்படி அதை எடுத்துக்கொள்ள முடிவது என்பது சீனாவுக்கு அதைவிட முக்கியம் . ஆசியாவின் நெம்பர் 1 என்பதையும் , தான் அமெரிக்காவுக்கு நிகர்தான் என்பதையும் உலகுக்கே அறிவிக்கும் முக்கியமான சமிக்கை இது. சர்வதேச அளவில் பலத்தை ( ராணுவ , பொருளாதார , அரசியல் ) காட்டி அதன் மூலம் தன் இருப்பையும் மதிப்பையும் நிலைநிறுத்தும் நடவடிக்கை இது.

அமெரிக்க சர்வதேச அரசியல் வரலாற்றை கவனிப்போருக்கு இது புரியும் , அமெரிக்கா எப்படி ஒரு வல்லரசாக மாறியது என்று . அமரிக்கா நேரடியாக எங்குமே நிலத்தை எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் உலகில் அது தலையிடாத பிரச்சனையே இல்லை என்னும் அளவுக்கு எல்லா எடத்திலேயும் தன் மூக்கை நுழைத்திருக்கிறது . தன் ராணுவ , பொருளாதார பலத்தை சர்வதேச influence ஆக status ஆக மாற்றிக்கொண்டது.

விஜய் ஏதோ ஒரு படத்தில் ரொம்ப உயரமா ஒரு வீச்சரிவாளை வைத்திருப்பார் , ஒருத்தனை வெட்ட எதுக்கு இவ்வளவு பெரிய வீச்சருவா என்று தோண்றும் . ஆனா யோசித்து பார்த்தால் கத்தியின் பயன் அது எவ்வளவு பேரை வெட்டுகிறது என்பதைவிட எவ்வளவு பேரை பயமுறுத்துகிறது என்பதிலேயே தானே இருக்கிறது. சீனா செய்வது தவறில்லையா என்று கேட்கலாம் , தவறுதான் , unjustified unprovoked aggression .ஆனால் சர்வதேச உறவுகள் இப்படி கறாராக அறம் பார்த்து நடப்பதில்லை , மேலோட்டமான சில புரிந்துணர்வுகளும் ,கூட்டுச் செயல்பாடுகளும் , கொள்கைகளும் , நிலைப்பாடுகளும் இருக்கும் தான் ஆனால் அதன் அடியில் இருந்து இயங்குவது ஒவ்வொரு நாட்டின் self interest என்பதே.

பல முக்கிய போர்களில் தன்னுடன் துணை நின்ற NATO நட்பு நாடுகளையே , இப்போது அமெரிக்க நீ யாரோ நான் யாரோ என்று சொல்லி திரும்பிக்கொள்கிறது , it simply seems to suit their self-interest now. ஆயிரக்கணக்கான கோடிகளை ஒவ்வொரு நாடும் கொண்டு போய் ராணுவத்தில் கொட்டுவது இதற்குத்தான்.

சரி இந்தியா என்ன தவறாக செயதுவிட்டது ? பெரிய தவறுகள் என்று எதுவும் சொல்லிவிடமுடியாது ஆனால் முக்கியமான பல பலவீனங்களை நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம் .நமது ராணுவம் திறமை வாய்ந்ததே , சீன எல்லையில் நெடுங்காலமாகவே LAC எப்படி மெயிண்டெயின் செய்வது போன்ற முறைமைகள் விரிவாகவே உள்ளன , நம் ராணுவம் அதில் விரிவான அனுபவமும் கொண்டது. ஆனால் நடப்பு அரசு பலவீனமானது என்பதான புரிதலை சீனா இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதெல்லாம் என்னதான் முஷ்டியை முறுக்குவது என்றாலும் இவையெல்லாம் பின்ணனியில் மிக கவனமாக அலசி ஆராயப்பட்டு முன்னெடுக்கப்படும் நகர்வுகளே .இரண்டு நாடுகளுமே அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள் , அண்டை நாடுகள் வேறு . எனவே ஒரு அரசின் ( நாட்டின் அல்ல ) capability என்ன என்பதை அலசி ஆராயாமல் இவ்வளவு அப்பட்டமான ஒரு அத்துமீறலை நிகழ்த்த சீனா துணியாது .பிழையாக ஒரு அடிவைத்து மூக்கு உடைபட நேருமானால் சீன அரசுக்கு உள்நாட்டில் அது மிகப்பெரிய அடியாக இருக்கும்.

மிக முக்கியமாக இந்த அரசு பொருளாதாரத்தை (குறிப்பாக டிமானியை ) கையாண்ட விதத்தை பார்த்து உலக நாடுகள் பல தங்களுக்குள்ளே புன்னகைத்துக்கொண்டிருப்பார்கள் . இது போன்ற விமர்சனங்களை உள்நாட்டில் வேண்டுமானால் அரசியல் எதிரிகள் , அரசை காழ்ப்பு , என்று எளிதில் புறந்தள்ளி கடந்து போய்விடலாம் , ஆனால் சர்வதேச அளவில் இது சாத்தியம் அல்ல.

சர்வதேச அரங்கில் எல்லா நாடுகளுமே மற்ற நாடுகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றன . ஒரு அரசு அமைவதில் இருந்து அந்த அரசு எப்படி செயல்படுகிறது அதன் வீக்னெஸ் என்ன அதன் தலைமை எப்படி, ராணுவ தயார் நிலை எப்படி , பொருளாதாரம் , உள்நாட்டு அரசியல் , மக்களின் மனப்போக்கு என்று எல்லாவற்றையுமே அறிந்திருக்கும். மேலும் இவ்வித அறிதலில் சாய்வுகளோ மிகைகளோ இருக்காது ஏனென்றால் எதிரியின் சாதக பாதகங்களை உள்ளபடி அறிவது பேரத்திற்கும் ,வெற்றிக்கு மிக அவசியமான ஒன்று . அதே போல இந்தியாவுக்கும் சீனாவின் இந்த அத்துமீறல் பெரிய ஆச்சரியமாக இருந்திருக்காது .

இதுவரை கொரோனாவை எதிர்கொண்ட விதத்தில் இருக்கும் போதாமைகளும் அரசின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கும். These things send clear signals to other countries on the motivations , capability and priorities of the government.

சீன பொருட்களை புறக்கணிப்பது பயன் தருமா ?

இதை சீனா மீதான பொதுமக்களின் எளிய ஆவேசம் என்னும் அளவில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் இதனால் பெரும் பயனோ , பாதிப்போ ஏற்படப்போவதில்லை. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி சீனாதான் . நம் நாட்டில் ஒரு பொருளை தயாரிப்பதை விட சீனாவிடம் இருந்து வாங்குவது விலை குறைவானது என்பதால் தான் அதை வாங்குகிறோம் .I don’t think tha very price conscious Indian public can overnight switch to local made product in such a way it will make a dent in trade.

இன்னொன்றும் இருக்கு நாம் அப்படி செய்தால் கூட சீனா அதற்கு எளிதாக retaliate செய்யும் நம்மிடம் இருந்து பொருட்களை வாங்குவதை சீனாவும் குறைத்துக்கொள்ளும்.It’s a lose-lose scenario

இந்த உரசலில் நேரடியாக உயிரிழந்த அந்த ராணுவ வீரர்களின் இழப்புக்கு எந்த விளக்கங்களும் ஈடாகாது . அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள் .துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பது வேறு ஆனால் நேருக்கு நேர் hand combat ல் ஈடுபடுவது என்பது முற்றிலும் வேறு . Respect to their courage and bravery !

(தொடரும் )

(June- 2020 )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: