
“இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாது பேச்சு பேச்சாதான் இருக்கனும் . “ஆமாம் கைப்புள்ள டயலாக் தான்,சிரிப்பாக இருந்தாலும் இதுதான் சர்வதேச diplomacy யின் அடிப்படை.பல அடுக்குகளில் நடக்கும் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வுகள் ,சந்திப்புகள் ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றிக்கும் விரிவான வரைமுறைகள் , முகமன்கள் மொழி ஆள்கைகள் , சமிக்கைகளும் etc.
ஆனால் இவைகளின் மூலம் செயல்படுத்தப்படும் விஷயம் ஒன்றே. தத்தமது வலிமையை , அவரவருக்கு உபயோகமான ஒரு விஷயத்திற்கு பேரமாகப் பயன்படுத்துவது . வலிமையை அரூவமான ஒரு வடிவிலிருந்து இருந்து அதை நடைமுறையில் பயனுள்ள ஒரு விஷயமாக்குவது . தமிழ் சினிமாக்களில் தனது பலத்தைக் காட்டி சந்தையில் மாமூல் வசூல் செய்யும் ஒரு ரவுடி செய்யும் அதே வேலைதான் இது .என்ன பெரிய அளவில் , சற்று நாகரீகமாக செய்யப்படுகிறது அவ்வளவு தான்.
சீன தகராறை கொஞ்சம் எளிதாக்க அதை நம் உள்ளூர் வாய்க்கா வரப்பு சண்டையாக கற்பனை செய்து பார்க்கலாம் , சும்மா ஒரு புரிதல் வசதிக்காக.ஒரு ஊரில் இந்திரன் சந்திரன் ரெண்டு சம்சாரிகள் இருக்கிறார்கள் என்று கொள்வோம் . பக்கத்து பக்கத்து வயல் , பெரும் விவசாயிகள். ஆனால் பல தலைக்கட்டுக்களாக அவர்களுக்கிடையே தீராத அறுதிப்பிரச்ச்னை. தற்சமயத்துக்கு பொத்தாம் பொதுவாக ஒரு அறுதி இருக்கு , அவ்வப்போது உரசல் வரும் , சின்ன சின்ன அடிதடி , பேச்சுவார்த்தை அப்புறம் கொஞ்ச நாள் எல்லோரும் அமைதியா இருப்பார்கள் பின் மறுபடியும் உரசல் இதுதான் நிலமை.
மெல்ல சந்திரனுக்கு ஆள் பலமும் அதிகார பலமும் சேர ஆரம்பிக்கிறது , லைட்டா சண்டித்தனம் செய்ய ஆரம்பிக்கிறார் . உழவு ஓட்டும்போது பத்து அடி வாக்கில் பக்கத்து தோட்டத்து நிலத்தையும் சேர்த்து உழுதுவிடுகிறார். விஷயம் தெரிந்து இந்திரன் ஆட்கள் தட்டிக் கேட்ட ,அவர்களையும் போட்டு தாக்கிவிடுகிறார்கள் சந்திரன் ஆட்கள்.
இந்திரனும் பெரிய ஆளுதான் ஆனா அவருக்கு வீட்டுக்குள்ளேயே பல சிக்கல்கள் , முட்டாள்தனமான சில நடவடிக்கைகளால் , கையில் இருக்க சாசையும் தொலைத்துவிடுகிறார் ,ஆள் பலமும் கம்மி . இப்போ இந்த வம்பன் சந்திரன் அந்த பத்து அடி நிலம் எப்பவுமே எங்களுடையதுதான் , தாண்டி இந்தப் பக்கம் வந்தால் காலை வெட்டிடுவேன்னு என்று எச்சரிக்கிறான் .
இப்போது பந்து இந்திரன் பக்கம் . தற்சமயம் அவர் குடும்பம் இருக்கும் நிலையில் சந்திரனை எதிர்த்து சண்டை போடவும் முடியாது .ஊரை கூட்டி சந்திரனை பஞ்சாயத்த்தில் வைத்து கேட்கவும் முடியாது . சந்திரனின் சண்டித்தனம் ஊரில் எல்லோருக்கும் தெரியும் , எல்லோரிடமும் ஏதோ ஒரு வம்புத் தகராறு இருக்கு . முக்கியமான எல்லோருக்கும் சந்திரனிடம் ஏதோ வகையில் கொடுக்கல் வாங்கல் இருக்கு . பஞ்சாயத்து என்று போனாலும் கூட எதுக்கு தேவையில்லாத வம்பு நீங்க ரெண்டு பேரும் சுமூகமாக பேசி முடிச்சுக்கோங்க என்று நழுவி விடுவார்கள்.
இதில் சந்திரனிடம் இன்னொரு நுட்பமான டெக்னிக் இருக்கு நூறு ஏக்கர் நிலத்தில் அவர் எடுத்துகொண்டது ஓரமாக, பத்தடி அகலமான நீளமான ஒரு துண்டுதான் .இடம் என்று பார்த்தால் இந்த பத்தடி நீள துண்டு ஒரு பெரிய இழப்பு இல்லைதான். இதற்காக குடும்பம் இருக்கும் சூழலில் ஒட்டு மொத்தமாக எல்லோரும் சண்டைக்கும் போக முடியாது .
இந்திரனுக்கு இப்போ சந்திரனிடம் பேச்சுவார்த்தைக்கு போவதை தவிர வேறு வழி இல்லை.சந்திரனுக்கு இப்படித்தான் நடக்கும்னு தெரியும் . பேச்சு வார்த்தையை கொஞ்சம் இழுத்தடித்து சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம், இந்தா இதில் ஐந்து அடியை நீ வைத்துக்கொள , நாம் சுமூகமா போய்விட்லாம் என்பார் . இந்திரனுக்கும் இதை விட்டால் வேற வழி இல்லை.இந்த “ஐந்தடி பத்தடி” விவகாரம் வீட்டிலே யாருக்கும் தெரியப்போவதில்லை யாரும் அளந்து பார்க்கப்போவதும் இல்லை.
இந்திரன் திரும்ப வீட்டுக்கு வந்து சந்திரன் கிட்ட பேச்சுவார்த்தை நடந்தது , பய பயந்திட்டான் அவன் தப்பை உணர்ந்திட்டான் , நம்ம கிட்ட இருந்த எடுத்த நிலத்த நமக்கே கொடுத்திட்டான் , ஜெயம் நமதே அப்படீம்பார். ஆளுக்கு ஐந்தடி சரியா போச்சுதானே இதுதான் சீனாவின் modus operanda.
நாமிருக்கும் நிலமைக்கு நமக்கு வேறு வழியே இல்லை .We simply don’ t have as many levers to pull. ஏற்கனவே பொருளாதாரம் மிக மந்தமான நிலையில் , கொரோனா பாதிப்பு இன்னும் உச்சம் கொள்ளவே ஆரம்பிக்கவில்லை , கொரோனாவினால் வேலை இழந்தோர் பிரச்சனை etc இந்த சூழலில் 65 sq km க்கெல்லாம் ஒரு போரை ஆரம்பிப்பது சரியான அணுகுமுறை இல்லை என்று நிபுணர்கள் சொல்லுவார்கள் , தொழிலதிபர்களும் போரை விரும்ப மாட்டார்கள், தொழில் முடங்கும் என்பதால் . So what other options are left ?
(தொடரும் )
(June – 2020 )
Leave a Reply