மொழிபெயர்த்த மெளனம்

‘Man with a child’ -by Xu man

சொல், என்னிடம்

பேச என்ன தயக்கம்.

சொல் …

நீ எப்போதாவது சிரித்தால் சொல்.

அது என்ன ஒரு சந்தோஷமென்று சொல்.

சிரி…

சிரிப்போம்.

உன்னுடைய வருத்தங்களை பேசு

புரியாத சோகங்களையும் .

எதிர்பாராத நேரத்தில் உன் நெஞ்சடைப்பதென்னவென்று சொல்.

மனதுடைந்த நாட்களை மற

நீ காதலினால் எழுதியன உரக்கப் படி.

பயங்களைச் சொல்

நீ பார்த்த அதிசயங்களைச் சொல்

கதவடிக்கும் கோபங்களைச் சொல்

ஆத்திரங்கள்,ஆர்வங்கள்,அழுகைகளைப் பகிர்.

பேச எதுவுமில்லையெனில் ?

பாடு ,மெல்லிய குரலில்.

அல்லது குழந்தைகளுக்கு குளிப்பாட்டி,தலைசீவி சட்டை அணிவித்து விடு.

அவர்களுடன் நடை பயில்

இப்படியாக எதுவும் செய்த பின்

தூங்கிப்போ

சூரியனுக்கு முதுகைக் காட்டியபடி.

(2001/திண்ணை )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: