பகவதியில் இருந்து பகவதி வரை

(ஜெயமோகனின் ‘செய்தி’ சிறுகதை குறித்த வாசிப்பு அனுபவம் )

/அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளுடைய இமைகள் சரிந்திருந்தன. மூடிய இமைகள் இப்படி பளபளப்பாக இருக்குமா? உள்ளே கருவிழிகள் ஓடும் அசைவு வண்டுபோல தெரிந்தது. உதடுகள் ஈரமாகி சற்றே வளைந்திருக்க கழுத்திலும் தோள்களிலும் வியர்வையின் பளபளப்பு//

ஒரு இளைஞனின் அகத்தில் அவனை அறியாமல் காமம் கிளர்வதை இயல்பாக சொல்லிப்போகும் கதை . இதை காமம் என்று சொல்வதே கூட மிகததட்டையான ஒரு வார்த்தைதான் .ஒரு சிலையின் எடைக்கு எடை ஒரு பாராங்கல்லை வைப்பது போன்றதது . இதை ஒரு சிக்கலான உணர்தல் -புரிதல்- வளர்தல் என்று சொல்லலாம் .இந்த வகை coming-of-age வகை கதைகள் நிறைய எழுதப்பட்டிருக்கு . ஆனால் அதை யதார்த்தமாகவும் இயல்பாகவும் சொன்ன விதத்தில் இந்தக் கதை முற்றிலும் வேறொரு தளத்திற்கு போய்விடுகிறது.

ஒரு பெண்ணின் எதிர்பாராத அணுக்கமும் , அவன் காணும் காட்சிகளும் அனந்தனை சட்டென எங்கோ இழுத்துப்போய் விடுகிறது . அனந்தன் சுயநினைவுடன் எதையும் புரிந்துகொள்வதற்கு முன்னரே அவன் அகமும் உடலும் அவனை முந்திக்கொண்டு விடுகிறது.

குளத்தின் மறுகரையில் துணி துவைக்கும் காட்சி முதலில் கண்களுக்கு காட்சிகளாக தெரிய ஆரம்பித்து அதன் பின்னரே அதன் ஓசை ஒரு இடைவெளியில் நம்மை அடைவது போல , பின் அது இக்கரையில் பட்டு எதிரொலிப்பதும் போல .ஒரு உத்வேகத்தில் நிகழ்ந்த மீறில் அதை ஒட்டிய பதட்டங்கள் , கோபங்கள் , ஏமாற்றங்கள் , சமாளிப்புகள் நியாயப்படுத்தல்கள் என்று அந்த ஆடலை கதாசிரியர் சொல்லியவிதம் அருமை.அக ஓட்டங்களை புறக்காட்சிகளாக வடிக்கும் சங்க அழகியல்.

இங்கு desire என்பது அனந்தனின் கடிதப்புனைவின் வழி செய்தியாகப் போகிறது .அது அனந்தனின் வாயிலிருந்து வார்த்தைகளாக வெளிப்பட்ட கணத்துக்குப் பின் அது அவனுடையது இல்லை பின் அது பகவதியின் being desired ஆகிவிடுகிறது . அதிலிருந்து அனந்தன் தூர விலகுவது என்பது கூட ஒரு மயக்கம் தான் , அது ஒரு வட்டம்.தூரமாக போய்விட்டாலும் ஒரு சுழற்றியில் மீண்டும் அணுக்கமாகிவிடும் அமைப்பது .

அனந்தனின் பெண் அறிதலும் ஒரு வட்டம் தான் – தான் அழகி என்றே கூட எண்ணிப் பார்த்திராத பகவதி , அணுக்கத்தில் சரிதாவாக தோற்றம் அளித்து பின் அதை அவன் கற்பனையில் வெவ்வேறு வடிவங்களில் விஜயஶ்ரீயாக விரித்துக்கொண்டு பின் மீண்டும் அந்த பஸ்ஸில் போகும்போது பகவதியிடமே வந்து சேர்வது.

அனந்தனின் செய்தி கடிதமொழியாக, பகவதியின் செய்தி உடல்மொழியாக. விஜயஶ்ரீயின் பல படங்களை பார்த்திருந்தாலும் விஜயஶ்ரீயின் தாளமாடல் பாடல் உடலசைவுகளிலேயே , அனந்தனின் மனம் லயித்து நிற்கிறது . ஒருவகையில் இந்த நுட்பமாக உடலசைவுகளிலேயே பின்னர் அனந்தனும் பகவதியின் அக ஓட்டத்தை உணர்கிறான் .செல்லத்தில் ஆரம்பித்து செல்லக்குட்டிக்கு போகும் அகத்தின் ஆடலை மிக இயல்பான நுட்பமான கோடுகளால வரைந்திருக்கும் கதை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: