
ஏற்கனவே புகழ் பெற்ற பாடல்களை கவர் செய்கிறேன் ரிப்ரைஸ் செய்கிறேன் என்று வரும் பெரும்பாலான பாடல்களின் சொதப்பலை பார்த்து நொந்து போயிருக்கும் தருணங்களில் இது போன்ற பாடல்களை கேட்கக்கிடைப்பது அப்படியே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறது.
ஏற்கனவே வெட்டி செதுக்கப்பட்ட வைரத்தை மேலும் மிளிரச்செய்வேன் என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல.அந்த படைப்பின் ஜீவனுக்குள் முதலில் போக வேண்டும் பின் அதில் ஒரு கலைஞனாக உணரும் இன்ஸ்பிரேஷனை கொண்டு பாடலை அதன் மைய அழகியல் குலையாமல் , நுட்பங்களையும், சேர்க்கைகளையும் விஸ்தாரங்களையும் சேர்க்க வேண்டும்.
சின்ன வயதில் காதிதத்தில் பூக்களை வரைய கற்றது போல தான் ஒவ்வொரு இதழாக வரையும் பொழுதும் ஒரு புள்ளியில் ஆரம்பித்து அந்த கோடுகளை நம் மனம் போல நீட்டலாம் ஆனால் அதை முடியும் போது அது ஆரம்பித்த இடத்திலேயே அதன் மையத்திற்குள் வந்து land ஆகவேண்டும் அப்படி முடியும்போதே அது ஒரு இதழாகிறது. கோட்டிலும் கவனம் இருக்க வேண்டும் பூவிலும் கவனம் இருக்க வேண்டும்.
குறிப்பாக இதை இவர் பாடிய விதத்தில் வரிகளில் emotional charge ஐ குரலிலும் கொண்டு வந்திருக்கும் விதம் அருமை. ஒவ்வொரு வார்த்தையையும் பாடிப்பாடி மெருகூட்டியிருக்கிறார்.பல முறை கேட்ட வரிகள் தான் they used to be like backdrops to the song but now they just jump out of the song like a bunch of rabbits .வைரமுத்துவும் கிரீஷ் புத்தென்சேரியும் சபாஷ் போட்டிருப்பார்கள் .
இன்னொரு விஷயம் இதில் இரண்டு பாடல்களை கவர் செய்திருக்கிறார். இரண்டும் வெவ்வேறு இசையமைப்பாளர்களில் பாடல் .ஒன்று ஏ.ஆர்.ரகுமான் பாடல் மற்றோன்று வித்தியாசாகர் இசையமைத்தது ஆனால் இந்த இரண்டும் பாடல்களுக்குமான இணைவை seamless ஆக நிகழ்த்தயிருக்கிறார்.Brilliant!
ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் திறமையான கலைஞர் , வரிகளின் இசையின் ஜீவனை நன்கு உணர்ந்து இதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் .He completely immerses himself into these songs.Looking forward to listen to much more such works from Harish .
மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து..
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா..
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா ..
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில்
என்னை மறந்து போவதுதான் முறையா
நினைக்காத நேரம் இல்லை
காதல் ரதியே ரதியே ..
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழிவிடும் காதல் நதியே நதியே
மறக்காது உன் ராகம், மரிக்காது என் தேகம்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா..
மலர்களே மலர்களே ….
#Malargale #HarishSivaramakrishnan #ARRehman #Vidyasagar #Vairamuthu #GireeshPuthenchery
(08 – June – 2020 )
Leave a Reply