சுயாதீன தரப்பு

இந்த ஒரு வருடத்தில் தமிழக நிகழ்வுகளையும் அது குறித்த பேஸ்புக் விவாதங்களையும் தொடர்ந்து கவனித்து வந்ததில் ஒரு புரிதல் கிட்டியிருக்கிறது . தமிழ் நாட்டில் கலை , இலக்கியம் , கல்வி , மொழி , இசை , சினிமா , சிந்தனை , அரசியல் , ஆடு, மாடு, கோழி என்று எதை எடுத்துக்கொண்டாலும் அந்த தளத்தில் முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் இறுதியாக இரண்டு தரப்பாக பிரிந்து நிற்பதையே பார்க்கிறேன் . ஒருபுறம் திமுக ஆதரவு நிலைப்பாடு மற்றொரு புறம் திமுக எதிர்ப்பு நிலைப்பாடு . ஜியாலஜிகல் fault line போல.

இந்தக் கோட்டின் எந்தப்புறத்தில் தன்னை ஒருவர் மானசீகமாக நிறுத்திக்கொள்கிறாரோ அந்த புள்ளியில் தான் அவரின் பெரும்பாலான கருத்துக்கள் நிலை கொள்கின்றன . அப்படி ஒருவர் நிறுத்துக்கொள்ளாவிட்டால் கூட வலிந்து அவரை நிறுத்திவிடுகின்றனர். வேறு பல பிளவுகளும் இருக்கின்றன தான் ஆனால் அதை எல்லாம் negotiate & distill செய்து கடந்து போய்விடலாம் ஆனால் இந்த ஆதார பிளவை பெரும்பாலான விவாதங்கள் கடக்கமுடிவதில்லை.

எல்லா விவாதங்களும் , விமர்சனங்களும் , வியாக்கியானங்களும் – so what என்று மீண்டும் மீண்டும் துருவிக்கொண்டே போனால் கடைசியில் வந்து முட்டி நிற்கும் புள்ளி இதுவாகத்தான் இருக்கிறது. இங்கு ஜார்ஜ் புஷ்ஷின் Either you are with US or you are with THEM என்னும் வரிகளை நினைத்துக்கொள்கிறேன். இதில் எந்த தரப்பு சரி தவறு என்பதற்குள் நான் போகவில்லை அது வேறு விவாதம் ஆனால் எல்லாவற்றை கொண்டு வந்து இந்த ஒற்றை பிளவில் இணைக்கும் போக்கில் உள்ள ஆபத்தை மட்டுமே இங்கு சுட்டுகிறேன்.

பல பதிவுகளையும் விவாதங்களை வாசிக்கும் போது மரணக்கிணறு ஆட்டம் தான் ஞாபகம் வருகிறது , பைக் என்னவோ ஓடிக்கொண்டுதான் இருக்கும் ஆனால் அது அந்த கிணற்றுக்குள்ளேயே தான் சுற்றி வர முடியும் அதை விட்டு வெளியே வர முடியாது . ஒரு வகையில் இது பெரும் சலிப்பையும் ஏமாற்றத்தையுமே அளிக்கிறது. ஆனால் தமிழ் சமூகத்தை புரிந்துகொள்ள இந்த பிளவை புரிந்து கொள்வது முக்கியம் என்று நினைக்கிறேன் .

இரண்டு தரப்புகளும் இரு பெரும் கருந்துளைகளை போல அதன் பரப்புக்கு அருகே வரும் எந்த ஒளியையும் உள்ளிழுத்துக்கொள்கின்றன. Nothing seems to escape these blackholes . சுயாதீன நிலைப்பாடுகளை கண்ணில் விளக்கெண்ணை விட்டுதான் தேட வேண்டியிருக்கிறது . அப்படி ஒட்டுமொத்தமாக உள்ளிழுக்கப்படாவிட்டால் கூட அதற்கு ‘அப்படி’ அல்லது ‘இப்படி’ என்று சுலபமாக ஒரு லேபிள் வந்துவிடுகிறது.

அரசியல் பேசுவது அவசியம்தான் . ஆனால் சிந்தனை கலை இலக்கியம் ஆன்மீகம் பற்றி எல்லாம் பேசுகிறோம் என்று ஆரம்பித்து விட்டு பின் சுற்றி சுற்றி வந்து இறுதியாக அரசியலையே மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் .இது நீண்ட கால நோக்கில் நம் சிந்தனை தளத்தில் தேக்கத்தை உருவாக்கும் .

சுயாதீன சிந்தனை என்பது நடுநிலை அல்ல . இரண்டு தரப்புகளையும் சமமாக இடித்து உரைக்கிறேன் பார் என்பதல்ல. சுயாதீன சிந்தனை என்பது politically agnostic , அரசியல் தரப்புகளை விவாதிக்கும் விஷயத்துக்கு நேரடி தொடர்பு இல்லாத பட்சத்தில் அவைகளை பொருட்படுத்தாது இருத்தல் .தரப்புகளை திருப்தி படுத்த மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாமல் இருத்தல் . பொருளாதாரம் குறித்தோ கோவிட் குறித்தோ பேசும் போதும் அரசியல் தரப்பு என்ற உள்ளீடு அவசியமே இல்லை என்பதை உணர்த்தல் .

சுயாதீன சிந்தனைப் போக்கை முன்வைப்பதையும் அதை அடையாளப்படுத்துவதையும் நாம் செய்யத்தவறினால் எல்லா சிந்தனைச் செயல்பாடுகளுக்குமே அவை சிந்தையில் உதிக்கும் முன்பே லேபிள் போடப்பட்டு பிராண்ட் ஆகிவிடும்.We will become a politically active but intellectually stunted society serving the needs of the political establishment rather than the society at large. There is a good reason why or how we came to this point but there are equally good reasons for us to start nurturing independent thoughts and discourses moving forward .

#IndependentThought #சுயாதீனசிந்தனை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: