
அந்த குருவிகள் சிறகு முளைத்து பறந்துபோய்விட்ட ஒரு கணத்தில் ஏதோ ஒரு வகையில் ஜெ எழுதிவரும் சிறுகதைகளுக்கும் ஒருவித கவித்துவ பூரணம் வந்து விட்டதாய் உணர்ந்தே. அதே போல ஜெ இன்று 69 சிறுகதைகளுக்குப் பின் இந்த தீவிர படைப்பு பாய்ச்சலின் நிறைவை அறிவித்திருக்கிறார். கதைகள் முடிந்துவிடவில்லை ஆனால் அவைகளை எழுதுவதை முடித்துக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார் .
வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்த கதைகள் வெவ்வேறு களங்களாக , வெவ்வேறு வடிவங்களாக , வெவ்வேறு உலகங்களாக தோன்றலாம் அனால் எழுத்தாளருக்கு இவை அனைத்தும் ஒற்றை புனைவுப்பரப்பே அதில் அவர் எழுப்பிக்கொள்ளும் ஆதார கேள்விகளின் எதிரொலிகளே இந்தக் கதைகள்.அந்த கேள்விகளுக்கான பதில்களை என்று இந்த கதைகளை சொல்லிவிட முடியாது ஆனால் இந்தக் கதைகளில் மூலம் இதுவரை தொடாத சில இடங்களை தொட்டிருக்கிறார் எனலாம் .
//அந்தச் சிறுபறவை என் சன்னல் விளிம்பில் அமர்ந்து வானை நோக்கி ஊழ்கத்தில் இருந்ததை நினைவுகூர்கிறேன். அது என்னை பயப்படவில்லை. ஆகவே மிக அருகே சென்று அதை படம்பிடித்தேன். அந்த படத்தை அடிக்கடிப் பார்த்துக்கொள்கிறேன். வாழ்வோ சாவோ அது வானுக்குரியது
ஆனால் வெறும்கூட்டை நிமிர்ந்து பார்க்கும்போது மனம் எடைகொள்கிறது. இந்த பதினெட்டு நாட்களும் ஒவ்வொருநாளும் காலையில் அதைத்தான் பார்ப்பேன். ஒருநாளில் பலமுறை சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேகத்திற்கும் அதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல கற்பனை செய்துகொண்டேன். அதைப்போலவே இதுவும் வெறும் உயிர்விசையால் நிகழ்த்தப்படுவது//
சுள்ளிகளை ஒவ்வொன்றாய் தேடி சேகரித்து கட்டிய கூடுதான் இந்தக் கதைகளா ?அதில் உதித்த தேடலின் குஞ்சுகள் தாய் பறவையின் புதுப்பித்தலா ?அந்த சிறிய குஞ்சு தான் தன் புதிய சிறகுகளை கொண்டு இதுவரை அறிந்திராத வானை அளக்கபோகிறதா, இதுவுமொரு புறப்பாடா ? எஞ்சும் கூடு அது விட்டுச்செல்லும் தடங்களா ?அந்த சிறு குஞ்சு பறக்கும் முன் ஊழ்கத்தில் அமரும் தருணம்தான் பூரணமா !
(23-May-2020 )
Leave a Reply