குதூகலத்தின் ஓவியன்

Scruffy the Tugboat by Tibor Gergely

குழந்தைகளுக்காக வரையப்படும் ஓவியங்களில் , சித்திரங்களில், குழந்தைகளால் மட்டுமே கற்பனை செய்ய முடிகிற ஒரு உலகம் இருக்க வேண்டும் , தொட்டால் ஒட்டிக்கொள்ளும் குதூகலம் இருக்க வேண்டும் ,குழந்தைகளின் உலகத்தில் எது முக்கியமோ அதை பெரிதாக்கவேண்டும், மிகைப்படுத்த வேண்டும் அவர்களின் பார்வையில் எது முக்கியமில்லையோ, தேவையில்லையோ அதை தவிர்க்க வேண்டும்.அதன் கோடுகளிலும் வண்ணங்களிலும் ஒரு களங்கமற்ற தன்மை இருக்க வேண்டும் .

காலப்போக்கில் வாழ்வில் நிதர்சனத்தை எப்படியும் அவர்கள் எதிர்கொள்வார்கள் தான் ஆனால் இளவயதில் இவ்வித சித்திரங்களும் கதைகளும் குழந்தைகளின் கற்பனையை நிரப்புவதில் ஒரு மேஜிக் இருக்கு . அந்த மேஜிக் அவர்களுடன் வாழ்நாள் முழுதும் மனதில் நீடித்திருக்கும்.

அந்த வகையில் எனக்கு பிரியமான சித்திரக்காரர்களில் ஒருவர் டிபோர் கெர்கலி. உலகப்போர்களுக்கு முந்தைய ஹங்கேரியில் பிறந்தவர் பின்னர் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவுக்கு குடியேறினார் . பல சிறார் புத்தகங்களுக்கும் , நியூயார்க்கர் சஞ்சிகைக்கும் சித்திரங்கள் வரைந்திருக்கிறார். இன்றும் கூட அவர் சித்திரம் வரைந்த புத்தகங்கள் குழந்தைகளிடம் பிரபலமாகத்தான் இருக்கிறது.

Scruffy the Tugboat – என்ற கதைக்கு அவர் வரைந்த ஓவியம் இது. ஒரு துறைமுகத்தின் பரபரப்பை , ஆரவாரத்தை ,மிதமான வண்ணங்கள் , எளிமையான தீர்க்கமான உருவங்கள் என்று குழந்தைகளுக்கே உரிய குதூகலம் துதும்ப வரைந்திருப்பார் . அந்த கப்பலின் நங்கூரமும் அதன் இறக்க பயன்படுத்தபடும் துளையும் அவர் வரைந்த விதத்தில் கப்பலின் கண்களாகவும் , சிரிப்பாகவும் தான் ஒரு குழந்தையின் கண்களுக்குத் தெரியும்.

(18 May 2020 )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: