
(2020 மே மாதம் இந்திய அரசு கொரோனா பரவலை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பொருளாதார உதவி திட்டம் குறித்து எழுதியது )
முந்தைய பதிவு ஒன்றில் கொரோனா பாதிப்புக்கு உதவியாக அரசு அறிவித்திருக்கும் நிதித்தொகுப்பு நல்ல விஷயமே என்றும் ஆனால் அது எவ்வாறு செலவு செய்யப்படப் போகிறதோ என்ற என் ஐயங்களையும் , அச்சங்களையும் பதிவு செய்திருந்தேன்.அதை ஆமோதிக்கும் விதமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்பு அமைந்திருக்கிறது
இது குறித்து வெறுமனே ஆலோசனைகளை சொல்லாமல் யாராவது ஒரு முன்வரைவை உருவாக்கு உள்ளார்களா என்று தேடிப்பார்த்தேன் , அதிர்ஷ்டவசமாக இது சிக்கியது , Swaraj India ( not Swarajya ) வின் தலைவர் யோகேந்திர யாதவ் படத்தில் உள்ள மாதிரி திட்டத்தை முன்வைத்திருக்கிறார் .
இதை அப்படியே எடுத்துக்கொள்ள கூட வேண்டாம் இதை ஒரு மாதிரியாகக் கொண்டு அதை ஒட்டி இந்த நிதி தொகுப்பை அறிவித்திருந்தால் கூட போதும் என்னைக் கேட்டால் செக்ஷன் B யில் இருந்து கொஞ்ச குறைத்துக்கொண்டு செக்ஷம் A வுக்கு ( அதாவது நேரடி, உடனடி உதவிக்கு ) இன்னும் நிதி ஒதுக்கலாம்.ஆனால் அரசு அறிவித்திருக்கும் திட்டத்தின் படி செக்ஷன் C க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் . Gross mismatch between what the country desperately needs and where the government is wanting to focus.

வெளிமாநிலங்களில் வேலை செய்யும் மக்கள் , வேலை செய்யும் இடத்திலும் இருக்க முடியாமல் , போக்குவரத்து வசதியும் இல்லாமல் ,போலீசாரால் விரட்டப்பட்டு பெரும் திரளாக குடும்பம், குழந்தைகள்,உடைமை சகிதம் படும் துன்பம் நாம் தினப்படி பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். கண் முன்னே நடக்கு இந்த அவலத்தை, கோடிக்கணக்கில் அல்லலுறும் மக்களின் துயரத்தை உள்வாங்காத பொருளாதாரக் கொள்கை/திட்டம் எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்.நான் இதை வெறுமனே அய்யோ பாவம் இவர்களை பாருங்கள் என்று செண்டிமெண்டல் கோரிக்கையாக மட்டும் வைக்கவில்லை ( which ofcourse we have every right to make ) .The current approach by the govt does not make sound economic sense even.
உலகின் தலைசிறந்த முதலாளித்துவ அமைப்பு உள்ள நாடு , சுதந்திர சந்தையை கொண்டாடும் நாடு அமெரிக்கா , ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் ?ஒரு தம்பதியினருக்கு தலா $2400 ம் ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதலாக $500 உம் நேரடியாக அளிக்கிறார்கள் – சராசரி வருமானம் உள்ள எல்லோருக்கும். வருமானம் அதிகம் உள்ளோருக்கு இது sliding scale ஆக குறைந்தபடியே வரும் .
Sounds like socialism isn’t it , that too coming from a right leaning Republican govt ?ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் பொருளாதாரம் குறித்த பரவலான புரிதல் இருக்கு . பொருளாதார பிரமிடின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு கையில் பணம் போய் சேராவிட்டால் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவே முடியாது என்ற solid ஆன புரிதல் இருக்கு .அமெரிக்கா என்றில்லை பல முன்னேறிய முதலாளித்துவ பொருளாதார நாடுகளிலும் இதுவே நடக்கிறது – Canada , Australia ,New Zeland , Germany – they all offer direct cash transfer.
ஆனால் சோசலிச நாடு என்று சொல்லிக்கொள்ளும் நாம் , வறுமைக்கோட்டுக்கு கீழ 25 கோடி மக்களை கொண்டுள்ள நாம் என்ன செய்கிறோம் ? பிழைப்பும் போய் , கையில் இருக்கும் காசும் கரைந்து, சொந்த ஊர் போய் சேர தவிக்கும் மக்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கிறோம்.இதை குரூர நகைச்சுவை என்றல்லாமால் வேறென்னவென்று சொல்வது.இந்த நாடுகள் அளிக்கும் அதே தொகை எல்லாம் யாரும் கேட்கவில்லை இந்திய சூழலுக்கு கட்டுபடியாகும் ஒரு தொகையை நேரடியாக அளித்தாலே கூட போதும்.நானறிந்த வரை எந்த ஒரு நாடுமே இவ்வளவு பெரிய தொகையை கொரோனா நிவாரணமாக அறிவித்துவிட்டு அதை மிகவும் தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக அளிக்காமல் இருந்ததில்லை.
At one end we speak highly of Nationalistic sentiments and the need for feeling the pride as a nation but at the other end we are absolutely turning away our faces to the plights of the most needy and desperate sections of our society. The lack of empathy in policy making is both shocking and baffling at the same time.Hope some miracle happens and the govt starts considering immediate direct cash transfers to the most desperate sections of the society , especially considering the Corona curve in India is not even flat yet , unlike lot of other countries we are comparing here.
(15 May 2020 )
Leave a Reply