பீஸ் லாக் கரோர் !

(போன வருடம் இதே நாள் எழுதிய பதிவு )

நேற்று மோடி அவர்கள் ஆற்றிய உரை கேட்டேன் , வழக்கமான சுற்றி வளைத்தல்களை தாண்டி நேரே “ஆத்மநிர்பர்” அறிவிப்புக்கு போய் விட்டேன். உரை ஆரம்பித்து 18 நிமிடம் கழித்து தான் மேட்டரே வருது , நல்ல வேளை யூடியிபில் ஒரு புண்ணியவான் நேரே இங்கே போ என்று டைம் ஸ்டாம்மையே கொடுத்துவிட்டார்.

முதலில் நல்ல விஷயம் Better late than never என்னும் அளவில் இந்த அறிவிப்பு பாராட்டத்தக்கது , இது கூட இல்லாமல் அல்லது இன்னும் தாமதமாக போயிருக்கும் நிலையை நினைத்தால் கெதக் என்றிருக்கு.சிலர் லேட்டாக வந்த்தால் தப்பில்லை என்று கருத்து சொல்லியிருந்தார்கள் , அப்படி அல்ல இந்த உரையை நம் சென்செக்ஸ் எப்படி எதிர்கொண்டது என்று எல்லோருக்கும் தெரியும்தானே.சந்தைகள் என்று மட்டுமில்லை பெரும்பகுதி முறைசாரா தொழிலாளர்களின் அடிப்படை தேவைகள், இன்றைக்கானவை இப்போதைக்கானவை.

ஆனால் …

இதில் சில smoke and mirrors வேலையும் இருக்கு. 20 லட்சம் கோடி என்பது இனிமேல் அறிவிக்கப்படும் தொகை அல்ல இதுவரை அறிவிக்கப்பட்ட மற்றும் இனி வரப்போகும் தொகையும் சேர்த்து தான் இருபது லட்சம் , அதை கழித்து விட்டு பார்த்தால் இனிமேல் வரவிருக்கும் தொகை அதில் பாதிதான் , அதுவும் இந்த நிதியாண்டில் வரவிருக்கும் தொகை அதிலும் பாதி கூட்டி கழித்து பார்த்தால் புதிதாக உடனடியாக பொருளாதாரத்தில் புழங்கவிருக்கும் தொகை தோராயமாக 5 லட்சம் கோடிக்கும் கீழ் , அதாவது நம் GDP ல் இரண்டரை சதம்.

இது கூட ஓகே ஆனால் இதை அரசு எப்படி செலவு செய்யபோகிறது அதாவது தேவையான மக்களுக்கு எப்படி கொண்டு செல்லப்போகிறது என்பது குறித்து ஒரு நிச்சயமின்மை இருக்கு. இது வரை இந்த அரசு மேற்கொண்ட நிதி மற்றும் பொருளாதார மேலான்மையை வைத்து பார்க்கும் போது (கோவிடுக்கு முன்னால் இருந்தே ) இந்த சந்தேகமும் நிச்சயமின்மையும் எழுவது நியாயமே. இதை உடனடி பயன் தருமாறு டிமாண்ட் சைட் பொருளாதாரத்தில் கொட்டுமா இல்லை ‘பழைய குருடி கதவை திறட’ என்பது போல லிக்விடிட்டி , எளிய கடன் என்று சப்ளை சைடு உதவியாக ஒரு அக்கவுண்டிங் கிம்மிக்காக போய்விடுமா என்று தெரியவில்லை.

தார்மீக ரீதியாக மட்டும் என்றில்லை இந்த பணம் நேரடியாக மிகவும் தேவைப்படும், அல்லாடும் மக்களுக்கு போவதே பொருளாதார ரீதியாகவும் நன்மை அளிக்கும் விஷயம் அது நடக்குமா என்னும் வலுவான சந்தேகம் இருக்கு ..tax paying middle class என்றே பிரதமர் உரையிலும் வேறு பல இடங்களிலும் குறிப்பிடுகிறார். MNREGA போன்ற ஏற்கனவே அமலில் உள்ள விஷயங்களை இன்னும் விரிவாக்குவது உடனடி நல்ல பலனை தரும்,மேலும் அரசே நேரடியாக வரிவான உள்கட்டமைப்பு வேலைகளை கையிலெடுப்பதும் நல்ல விஷயமே.ஆனால் என்ன அரசு இது அவர்களின் இதுவரையான கொள்கைக்கு மாறானாது ( PPP ! ) என்று எண்ணாது செயல்படவேண்டும் .. desperate times need desperate measures.

இதை அரசு எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது குறித்த விரிவான அறிவிப்பு வந்தால் தான் ஏதும் சொல்ல முடியும். எனக்கு தனிப்பட்ட முறையில் சொந்த ஊருக்கு பயணம்கொள்ள இன்னல்படும் தொழிலாளர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சார்ந்த பிரதமர் விரிவாக குறிப்பிடாமல் போனது பெரிய ஆதங்கமே .அன்புக்கு எதிர்ப்பதம் வெறுப்பல்ல அலட்சியம் தான் என்பது நியாபகம் வந்தது.அந்த வகையில் இது பெரிய ஒரு லெட் டவுன் , we treat the most unfortunate in our society as if dignity does not matter to them.

இந்த தருணத்தில் ஏனோ கப்பர் சிங் வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறார்.”அப் தேரா கியா ஹோகா காலியா”

(13 May 2020 )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: