உணவும் மதமும்

Photo credit:Ay.Ashok Saravanan

சமீபத்தில் ஒரு ஜைன உணவகத்தில் ‘இங்கு முஸ்லிம்கள் வேலை செய்யவில்லை’ என்று ஒரு போர்டை வைத்திருந்தது தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தது.அது குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பல விவாதங்கள் நடந்தன . முஸ்லிம்களின் ஹலால் (Halal) உணவு என்ற வகைப்பாடு அடிப்படையில் உணவு சம்பந்தமானது அதை யார் தயார் செய்கிறார்கள் என்பது குறித்ததல்ல . யூதர்களின் கோஷர் (kosher) உணவும் அப்படியானதே , என்ன உணவு சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்பதான வரையறைதான் அது . இவ்விரு வார்த்தைகளின் பொருளே கூட “அனுமதிக்கப்பட்டது” என்னும் அர்த்தத்திலேயே வரும்.

இவ்வகை மத ரீதியான உணவு வகைப்பாடுகள் எல்லாம் விமான நிறுவனங்களில் ஏற்கனவே நீண்ட காலமாக புழக்கத்தில் உள்ளவை தான் .ஹலால் , கோஷர் , ஜெயின் , ஹிந்து வெஜ் , ஹிந்து நான் வெஜ் போன்றவை உலகெங்கும் விமான நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மத உணவு வகைகளே .எல்லா இடத்திலும் எல்லா பயணங்களில் இது கிடைக்கும் என்று சொல்ல முடியாது , வாடிக்கையாளர்களின் தேவையையும் விருப்பத்தையும் பொறுத்து இது அமையும்.

ஜெயின் உணவு என்பது அடிப்படையில் வீகன் (Vegan ) உணவு ,அத்தோடு வெங்காயம் பூண்டு , இஞ்சி போன்ற நிலத்துக்கு அடியே வளரும் காய்கறிகளை தவிர்த்தது .இந்து உணவு என்பது இந்திய ஊன் உணவு ஆனால் பன்றி இறைச்சியும் மாட்டிறைச்சியும் தவிர்த்தது .சுவாரசியமாக இந்து வெஜிடேரியன் உணவு என்பது மதம் சார் உணவு என்னும் பிரிவில் வைக்கப்படவில்லை அது பொதுவாக வெஜிடேரியன் என்னும் டயடரி குரூப்புக்குள் வருவது.

நாம் இதுவரை கண்ட இந்த வகைப்பாடுகள் எல்லாம் உணவின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும் பாகுபாடுகளே ஒழிய உணவை யார் தயாரிக்கிறார்கள் அல்லது அதை யார் உண்ணலாம் என்பது குறித்த பாகுபாடு அல்ல.

இஸ்லாமிய உணவை எந்த மத்ததை சார்ந்தவர் வேண்டுமானாலும் சமைக்கலாம் , உணவு மட்டும் ஹலால் விதிகளுக்கு உட்படால் போதும். கோஷர் உணவும் அப்படித்தான் , இதில் ஒரு சின்ன வேறுபாடு , உணவு தயாரிப்பை ஒரு யூதர் மேற்பார்வையிடவேண்டும் என்பது .யூத உணவு கட்டுப்பாடுகள் மிக சிக்கலானவை எனவே இது ஒரு நடைமுறை தேவையாக பின்பற்றப்பட்டு வருகிறது.பைபிளில் எல்லாம் உணவும் உண்ணத்தகுந்ததே என்று குறிப்பிடுகிறது எனவே கிருத்துவர்களும் உணவு சார்ந்த குறிப்பிடும்படியாக முறைமைகள் ஏதுமில்லை . எனவே நானறிந்து அபிரகாமிக மதங்கள் எதிலும் மாற்று மதத்தவர் தயாரித்த உணவை உண்ணக்கூடாது என்ற தடைகள் இல்லை , பாகுபாடு உணவு மட்டும் சார்ந்ததே.

சர்ச்சைக்குரிய அந்த ஜைன உணவகத்தில் அவர்கள் வெளியிட்டிருந்த விளம்பரத்தில் இங்கு முஸ்லிம்கள் வேலை செய்யவில்லை என்று அறிவித்திருந்ததை மதம் சார்ந்த உணவு வகைப்பாட்டின் ஒரு பகுதியாக நாம் கொள்ள முடியாது , இது தெளிவான மதம் சார்ந்த பாகுபாடு அந்த மதத்தை பின்பற்றும் மனிதர்கள் சார்ந்தது பாகுபாடு என்றே கொள்ளமுடியும்.

ஜைன மத விதிகளின் படி ஜைனர்கள் தான் ஜைன உணவை சமைக்க வேண்டும் என்று இருக்காது என்று நம்புகிறேன் இல்லையென்றால் ஏர்லைன்சில் வழங்கப்படும் ஜைன உணவு அந்த விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படுவது இயலாத காரியம்.இதுவே இந்து (veg & non-veg ) உணவுகளுக்கும் பொருந்தும் என்பதை நாம் எளிதாக ஊகிக்கலாம்.This is a discriminatory practice there is no ambiguity about it.

பொதுவாகவே இந்தியாவில் வேறு பல விஷயங்களை போல உணவும் எவ்வளவு முக்கியமான ஒரு discriminatory tool என்பதை நாம் எல்லோருமே அறிவோம்.இந்திய சமூக வழக்கத்தில் நாம் உணவில் அடிப்படையில் மட்டும் இவ்வகை வகைப்பாடுகளை செய்வதில் அதன் மீது ritualistic purity என்னும் கருத்தையும் மேலேற்றுகிறோம். இன்னும் ஒருபடி மேலே போய் அந்த சடங்குத் தூய்மையை இன்னார் தான் செய்ய வேண்டும் என்பதையும் .

இங்கு ஜைன முறையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள் கிடைக்கும் என்பதற்கும் இங்கு முஸ்லிம்கள் வேலை செய்யவில்லை என்பதற்கும் உள்ள வித்தியாசம் மிக ஆழமானது – as a society we are still struggling to cross it.

(12 May 2020)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: