தேர்தல் முடிவுகள்

பல மாநிலங்களை சார்ந்த பல கோடி மக்கள் வாக்களித்ததில் அடினாதமான என்ன எழுந்து வருகிறது என்று யோசித்துப்பார்த்தால் அது பிஜேபியை மறுக்கும் ஒரு நிலைப்பாடு என்று சொல்லலாம் . கேரளாவில் முன்னர் இருந்த ஒற்றை தொகுதியையும் இம்முறை இழந்தது . கடினமான போட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்ட வங்காளத்தில் கூட மம்தா 48 % வாக்குகளை பெற்று பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் . தமிழகத்தில் பாஜாகாவுடன் கூட்டு சேராமல் இருந்திருந்தால் அதிமுகவுக்கு இன்னுமே கூட வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்

தமிழ்கத்தில் பாஜகாவுக்கு மூன்று இடங்கள் கிடைக்கும் என்று ஊகித்திருந்தேன் ஆனால் மொடக்குறிச்சியில் வெற்றி என்பது ஆச்சரியமாக இருந்தது . மொடக்குறிச்சியில் அப்படி என்ன விசேஷம் என்று உள்ளூர்காரர்கள் தான் சொல்ல வேண்டும் . தமிழகத்தில் பாஜக வென்றிருப்பது ஒரு எச்சரிக்கை தான் என்றாலும் அவர்கள் வென்ற தொகுதிகள் எத்தகையவை என்பதில் நமக்கு ஒரு பாடம் இருக்கலாம்.

நாகர்கோவில் , திருநெல்வேலி , கோவை (தெற்கு ) மூன்றுமே மாற்று மதத்தவர் அதிகம் வாழும் பகுதி . நாகர்கோவில்தான் தமிழகத்திலேயே இந்துக்கள் மிகக்குறைவாக வாழும் பகுதி என்று நினைக்கிறேன் . இந்துக்கள் மொத்தம் 60 சதம் தான் இருப்பார்கள் , ஒப்பு நோக்க ஒட்டுமொத்த தமிழகத்தில் இந்துக்கள் சராசரி 88 % .இந்த வகையான religious diversity உள்ள இடங்கள் – பாஜக வடக்கில் பல இடங்களில் வெற்றிகரமாக பயன்படுத்திய டெம்ப்ளேட்டுகளை தமிழகத்திலும் போட்டு பார்க்க வசதியான இடங்களாக இருக்கும் என்று நினைக்கிறேன்

இந்த தேர்தல் பாஜகாவை மறுக்கும் நிலைப்பாடு என்று தான் சொல்லியிருக்கிறேனே தவிர முற்றாக எதிர்க்கும் நிலைப்பாடு ஏற்படவில்லை என்று தோன்றுகிறது . வங்காளத்தில் பாஜக மூன்று தொகுதி என்பதில் இருந்து தற்போது 75 தொகுதிகள் என்பதே பெரும் பாய்ச்சல் தான் . எனவே எல்லா தரப்புகளும் முடிந்த அளவு தத்தமது இடங்களில் காலூன்றிக்கொள்ள முயன்றிருக்கிறார்கள்.

கோவையில் கமல் தோற்றது ஒரு சோக நிகழ்வு . அவர் முதலில் கட்சி ஆரம்பித்து கிராமசபை போன்ற விஷயங்களை முன்னெடுக்கையில் இருந்த எதிர்பார்ப்பு பின்னர் மாறிவிட்டது . குழப்பமான நிலைப்பாடுகள் , குழப்பமான communication , குழப்பமான கூட்டணி என்று பல்வேறு குழப்பங்களில் மாட்டி தனது political leverage ஜ கணிசமாக இழந்துவிட்டார் . இரண்டு கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கும் ஆளானார் . கமல் சறுக்கிய விஷயங்களில் திருமா வென்றிருக்கிறார் , perhaps he can learn a thing or two from thiruma.

இருந்தாலும் கமல் முன்வைத்தது ஒரு லட்சியவாத நோக்கு என்பதனால் அதில் ஒரு credibility இருந்தது . தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியல் வேண்டும் , அதிலும் புதிய பார்வைகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிலையில் இருந்தவர் கமல். அவருக்கான ஒற்றை வெற்றியை மறுப்பதன் மூலம் மாற்றத்துக்கு உண்டான சாத்தியங்களை இப்போதைக்கு முற்றாக சாத்திக்கொண்டுவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும் .

சென்னைக்கு அடுத்தபடியாக அதிகம் படித்த மக்கள் வசிக்கும் ஒரு நகர்புற பகுதியில் இது நடந்திருப்பது இன்னுமே பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது . கோவைக்காரனான எனக்கு இது ஒரு புறம் புதிராகவும் மற்றொரு புறம் embarassing ஆகவும் இருக்கிறது .

கமல் இந்த தோல்வியை பொருட்படுத்தாமல் தனது நிலைப்பாடுகளையும் , உரையாடல்களையும் மேலும் தெளிவுபடுத்திக்கொண்டு மீண்டும் களத்துக்கு வர வேண்டும் என்பதே என் விருப்பம் . இது வரை அரசியல் மீது ஆர்வமே காட்டாத ஒரு பெரும் கூட்டத்தை அரசியலுக்குள் இழுத்திருக்கிறார் கமல் . இளைஞர்கள் பெண்கள் என்று அவரால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரின் ஸ்டார் பவரால் மட்டுமே ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வரவில்லை அவர் முன்வைத்த நன்னம்பிக்கை அரசியலாலும் ஈர்க்கப்பட்டே உள்ளே வந்தார்கள் .

காலத்துக்கு ஏற்றவாறு நமது political culture மாற இது போன்ற புதிய பார்வைகள் , கோணங்கள் , நிலைப்பாடுகள் மிகவும் அவசியம் . இன்று அரசியலில் இறங்க நினைக்கும் இளைஞர்களுக்கு கமல் போன்ற ஒரு ரோல்மாடலாவது அவசியம் . கமலஹாசனுக்கு தமிழகம் தேவைப்படுவதை விட தமிழகத்துக்கு கமலஹாசன் போன்றோர் தேவைப்படுகிறார்கள் .

பத்து வருடங்கள் கழித்து ஒரு புதிய முதல்வருடன் ஆட்சிக்கு வந்திருக்கு திமுக இந்த முறை எப்படி இருக்கப்போகிறது என்று தெரியவில்லை . இதற்கிடையே மத்திய அரசு மாநில அரசுக்கு என்ன விதமான நெருக்கடிகளை கொடுக்கப் போகிறது என்பதையும் ஒருவாறு ஊகிக்கலாம் 🙂 சமகாலத்துக்கு ஏற்ற ஒரு Progressive அரசியலை முன்னெடுக்க – ஸ்டாலின் , விஜயன் , தீதி ,திருமா , கமல் – அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: