அறுவடை நாளில் சிரம் பிழைத்துக் கிடக்கும் நெற்கதிர் குறித்த பிரமிளின் அபாரமான கவிதை ஒன்றை எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் பகிர்ந்திருந்தார் . மலை துளைத்து செல்லும் ரயில் வெளிவருகையில் நம் கண்களில் பட்டு கூசும்பொன் வெய்யிலை போன்ற கவிதை

ஒரு நூற்றெட்டு
அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடை வயல்வெளியில்
ஏதோ ஒரு ஆள் நிழல் மிதிக்க
மடங்கி சிரம் பிழைத்துக் கிடந்து
அறுவடை முடிய ஆட்கள் நகர
மெல்ல வளைந்தெழுந்து
தனித்து நாணிற்று ஒரு கதிர்
உச்சியில் ஒரு நெல்
சுற்றிலும் வரப்பு நிழல்களின்
திசை நூல்கள்
இன்று நிழல் நகரும்
நாளை உதயம்
உனக்கும் நாணத் திரை நகரும்
உயிர் முதிரும்
உன் கூந்தலின் உமி நீக்கி
வெடித்தெழும் வெண் முகம்
ஓர் அணுத் தான்யத்தின்
பகிரங்கம்
— பிரமிள்
Leave a Reply