தராசும் மணற்கடிகையும்

Image Credit Rommy Torrico 

ஜனநாயகத்துக்கு பிற எதேச்சதிகார அரசியல் செயல்பாடுகளுக்கும் இடையே ஆன நேரடியான வித்தியாசம் என்ன ? எதேச்சாரங்களில் அரசியல் செயல்பாடு என்பதே non-existent ஆக இருக்கும் . சீனா, ரஷ்யா , போன்ற நாடுகளில் எல்லாம் அரசியல் செயல்பாடு என்பது அவ்வப்போது பெயரளவில் நடக்கும் சில சடங்குகள் மட்டுமே . ஒரு கட்சி ஒற்றை ஆட்சி என்ற எதேச்சதிகார நிலை வந்து , அது அப்படித்தான் இருக்கப்போகிறது என்ற நிலை வந்தபின் ஒட்டு மொத்த அரசியல் செயல்பாடும் அப்படியே நீறு பூத்த நெருப்பாக அடங்கிவிடும்

ஆனால் செயல்படும் ஜனநாயகம் என்பது அப்படி அல்ல , அது தொடர் அரசியல் செயல்பாட்டினாலேயே அடையாளப்படுத்தப்படுகிறது , உயிர்ப்புடன் திகழ்கிறது . ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது பிரதிநிதித்துவம் என்பதும் தொடர்ந்து பல்வேறு விசைகளால் மாற்றி அமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.ஜனநாயகத்தில் progress என்று சொன்னால் அதிகாரமும் பிரதிநிதித்துவமும் இருக்கும் இடத்தில் இருந்து இல்லாத இடத்துக்கும் மெல்ல நகர்ந்து கொண்டே இருக்கும் இயல்பு , ஒரு தராசைப் போல , அதில் முன்னும் பின்னும் என்று ஒரு ஊசலாட்டம் இருந்தாலும் அது மெல்ல மெல்ல ஒரு சமநிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் .

எதேச்சதிகாரம் என்பது மணல் கடிகை போன்றது . ஒரு முறை கவிழ்த்து விட்டால் பின் மேலிருக்கும் மணற் துகள்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக கீழே விழ காத்திருக்க வேண்டும் , அதை நிறுத்தவோ மாற்றவோ முடியாது.அதை மாற்ற வேண்டுமானால் ஒட்டுமொத்தமாக அதை தலைகீழாக கவிழ்த்தால் தான் உண்டு. பின் மீண்டும் அதுவே நடக்கும் , ஏதோ ஒரு பக்கம் தான் மணற்துகள் குவியும் , தரப்புகளுக்கான சமநிலை என்பதே ஏற்படாது . எனவே ஜனநாயகம் என்பதன் உயிர்நாடியே அரசியல் செயல்பாடுதான் . அது நிகழ்ந்துகொண்டே இருக்கும் வரை தான் அது ஜனநாயகம் அது நின்றால் பின் மெல்லச் சரியும் மணற்கடிகையாகிவிடுவோம் .

அதனால் தான் நம் நாட்டில் அரசியல் செயல்பாடு என்பது இவ்வளவு தீவிரமாக இருக்கிறது . வேறு பல மேலை நாடுகளில் (அமெரிக்கா தவிர ) வசிக்கும் நண்பர்கள் இதை உணர்ந்திருப்பார்கள் இந்திய அரசியல் பரபரப்புகளை ஒப்பு நோக்க அங்கெல்லாம் தேர்தல் தவிர பிற சமயங்களில் காற்று வாங்கிக்கொண்டிருக்கும் . அதனால் தான் இந்தியாவில் பொதுத்தேர்தல் என்றால் அத்தனை நாட்டு ஊடகங்களும் திருவிழா காண வருவது போல கூடுகிறார்கள்.

தொடர் அரசியல் செயல்பாடு எனும்பொழுது அதன் பகுதியாக நாட்டு நடப்புகளை விவாதிப்பதும் , புரிந்துகொள்வதும் , விமர்சிப்பதும் , ஏன் போராடுவதுகூட இன்றியமையாததாகிறது . இதில் அரசியல் செயல்பாட்டாளர்கள் மட்டும் ஈடுபட வேண்டும் என்பதில்லை பொது மக்களும் பரவலாக பங்குகொள்ள வேண்டும் .

ஜனநாயக அரசியல் செயல்பாடு என்பது இரண்டு தளங்களில் நிகழும் . ஒன்று கட்சி சார் நிலைப்பாடுகள் – கட்சிகள் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் , உறுப்பினர்கள் என்று திரண்டு உருவாக்கும் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் .இன்னொன்று அவரவர் நலம் சார்ந்து பொதுமக்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் . இந்த இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது .அரசியல் கட்சிகள் என்னதான் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவை என்றாலும் பல தருணங்களில் அவர்களின் political exigency & survival க்காக தங்களை தாங்களே காத்துக்கொள்ள நிலைப்பாடுகளை எடுப்பது உண்டு .

எதிரெதிர் தரப்புகளுக்கு இடையே , ஆளும் கட்சி எதிர்கட்சிகளுக்கு இடையே சில புரிந்துணர்வுகள் சில கணக்குகள் ஏற்படுவதும் உண்டு . ஏனென்றால் அரசியல் என்பதே பல்வேறு வகையான் பேரங்கள் நடக்கும் தளம் . எதிர்கட்சியே என்றாலும் பொதுமக்கள் முழு முற்றாக அவர்கள் தங்கள் நலனை எல்லா தருணங்களிலும் தூக்கிப்பிடிப்பார்கள் என்று நம்பி இருக்க முடியாது . எனவே அரசியல் செயல்பாட்டின் நேரடி பங்களிப்பாக பொதுமக்களின் செயல்பாடு இருப்பது இயல்பே அது ஆரோக்கியமான விஷயமும் கூட . அது துல்லியமாகவோ , தீவிரமாகவோ இல்லாமல் இருக்கலாம் , ஆனால் அவசியமானது . அதன் தார்மீகம் புறம்தள்ள முடியாத ஒன்று .

நாடு ஒரு பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட அதை காரணம் காட்டி இவ்வித குரல்களை நாம் suppress செய்யக்கூடாது . விமர்சிப்பதை எதிர்ப்பதாக கட்டமைக்க கூடாது . இது ஊடகங்களுக்கும் பொருந்தும். நாம் அடிக்கடி ‘அரசியல் செய்கிறார்கள்’ என்ற ஒரு பதத்தை கேட்க நேரிடும் . இது ஏதே கொலைக்குற்றம் போல பார்க்க வேண்டியதில்லை இதை செய்யாத கட்சியே உலக அளவில் இல்லை . அரசியல்வாதி ‘அரசியல் செய்யாமல்’ வேறு என்ன செய்வார் ?எனவே பொதுமக்களாக நம் கவனம் ‘அரசியல் செய்தல்’ என்னும் விஷயத்தை தாண்டிப்போய் ஒரு விஷயத்ததின் உண்மைத்தன்மை , நியாயம் , அது மக்களின் மேல் உண்டாக்கும் பாதிப்பு போன்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும் .

வேறெப்போதையும் விட கட்சி அரசியலை கருதாத பொதுமக்களின் குரலுக்கும் விமர்சனங்களுக்கும் முக்கிய தேவை உள்ளது . எதிர்கட்சிகளின் தரப்பு என்பது வேறு மக்களின் தரப்பு என்பது வேறு . மக்களின் தரப்பு என்பது சரியான தகவல்களின் அடைப்படையில் ,நியாயமான வைக்கப்படும் விமர்சனமாக வெளிப்பட்டால் அதற்கும் கட்டாயம் ஒரு தார்மீக வலு உண்டு. உலகெங்கும் அரசியலில் நிகழ்ந்த பெரும் மாற்றங்கள் தொழில்முறை அரசியல்வாதிகளாலோ ஆதரவாளர்களாலோ நிகழ்ந்தவை அல்ல . அது அன்று வரை கண்ணுக்கு புலப்படாமல் , அரசியலின் பால் ஆர்வம் ஏதும் இல்லாத , silent majority தங்களை எண்ணங்களை முன்வைக்கும்போதே நிகழ்திருக்கிறது . Let people be well informed , let them speak without fear or favour .

#Democracy #DemocraticPractice

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: